கோடையை சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு முக்கியமான ஆலோசனைகள்..! – மிஸ் பண்ணாம படிங்க..!

கோடையை சமாளிக்க : பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம். குறிப்பாக, சம்மரில் உடல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதன்படி, எந்த உணவு சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை இங்கு காணலாம்.

 

உடல் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வகையான பழங்களை கர்ப்பிணிகள் தாராளமாக உட்கொள்ளலாம். கோடையில் தர்பூசணி சாப்பிடுவது சிறந்த முடிவாகும்.

பிளம்ஸ் ,எலுமிச்சை, கிவி, கொய்யா போன்ற பழங்கள் விட்டமின் சி வழங்குவதோடு, அயன் உறிஞ்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரும்பு நார்ச்சத்தை பெற ஆப்பில் சிறந்த வழியாகும்.

அத்திப்பழம் நல்ல கொழுப்பு நார்ச்சத்து நிறைந்துள்ளது வாழைப்பழம் கால் பிடிப்பதை தடுக்கிறது அதேபோல மாம்பழத்தின் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது.

--Advertisement--

மாம்பழம், தர்பூசணி, திராட்சை ,வாழைப்பழங்களின் சர்க்கரை நிறைந்துள்ளது இது ரத்த சர்க்கரையை அதிகரித்து கர்ப்ப காலத்தில் . நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, எதையும் அளவாக சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை நிறைந்த சோடாக்கள் சர்க்கரை உணவுகள் , பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் நல்ல கலோரிகள் சுத்தமாக கிடையாது.

காபி, டீ குடிப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

மதுபானம் அருந்துவது மற்றும் புகை பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

தினம் ஒரு மாதுளை மிகவும் நல்லது .இது ரத்தத்தை அதிகரிக்கும்.தினமும் ஏதாவது ஒரு கீரை சாப்பிட வேண்டும் .அதிக காரம் உப்பு சேர்க்க கூடாது அசைவ உணவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறி ,பொறியியல், கூட்டு அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. சிறு தானிய உணவுகள் பயிர் வகைகள் தினசரி எடுத்துக் கொள்ளலாம் .இரவில் எளிய வகை உணவுகள் சாப்பிடலாம்.

சிலர் கருசிதைவுப் பயத்தில் பப்பாளி, அண்ணாச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஆனால், இந்த தகவல் மருத்துவரீதியாக உறுதி செய்யப்படவில்லை.</p