அரசு பேருந்துகள் தனியார்மயம் – தமிழ்நாடு அரசு

சென்னையில்  அரசு  பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல்  செய்கிறார் என பிரதமர் திரு மோடி அவர்களை தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள தனியார் மயம் கொண்டு வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர முடிவு என  மாநகர போக்குவரத்து கழகம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கிராஸ் காஸ்ட்  காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பார்த்த பலரும் திமுக அரசு மோடி அவர்களை தனியார் மையத்தை ஊக்குவிக்கிறார் என பல மேடைகளில் குற்றம் சாட்டி விட்டு தற்போது திமுக அரசும் அதே செய்கிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

பொதுமக்களும் இந்த முடிவுக்கு தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைதளங்களில் தனது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தனியார் மயமாக செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற முக்கியமான அரசியல் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.