வெளியான கருத்துக்கணிப்பு : 3 கட்சியில் யார்..? யார்..? எவ்வளவு வாக்கு சதவீதம் தெரியுமா..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர் ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது

அதன்படி பண்பியல்-எண்ணியல் ஆய்வுமுறைகள் ஒருங்கிணைந்த தனித்துவ அணுகுமுறையைப் பின்பற்றி, மக்கள் ஆய்வகத்தில் முறையான பயிற்சி பெற்ற இரு ஆய்வு-நெறியாளர்களும் 45 களத்தகவல் சேகரிப்பாளர்களும் பெப்ரவரி 21 முதல் 23 முடிய ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய களஆய்வு முடிவுகளின் சாராம்சம்:

எண்ணியல் தரவுகளுக்காக 1250 பேருடனும் பண்பியல் தகவல்களுக்காக 340பேருடனும் 135 வாக்குச்சாவடிகளில் சந்திப்புநிகழ்ந்துள்ளது.

இறுதிக்கட்டப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் வேட்பாளர்களுக்கு வெளிப்படும் ஆதரவு:

  • 39.5 இந்திய தேசிய காங்கிரஸ்
  • 24.5 அனைத்து இந்திய அண்ணா திமுக
  • 9.5 நாம் தமிழர் கட்சி
  • 2.0 தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
  • 1.5 பிற கட்சிகள் + சுயேட்சைகள்
  • 2.0 நோட்டா + வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை +
  • 21 சொல்ல விருப்பமில்லை + முடிவுசெய்யவில்லை

Summary in English : The results of the 2023 Erode East by-election survey have been announced, giving the people of Erode East a better understanding of their political leanings.

--Advertisement--