Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெற்றி யாருக்கு பர பரபரப்பான 3வது போட்டியில் களம் காண்கிறது பங்களாதேஷ் அணி..!!

வெற்றி யாருக்கு பர பரபரப்பான 3வது போட்டியில் களம் காண்கிறது பங்களாதேஷ் அணி:இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் அந்த அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி க்ளீன் ஸ்வீப் செய்யுமா என்று அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த தொடரில் இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் கேப்டனாக உள்ளார். அதே சமயம் வங்கதேச அணியின் கேப்டன் பதவி லிட்டன் தாஸ் கையில் உள்ளது. இந்தியாவில் மொபைல் போன்களில் இந்த போட்டியை எளிதாக பார்க்கலாம். இப்போட்டி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

BAN vs ENG ஹெட் டு ஹெட்: இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 22 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் இங்கிலாந்து அணி 18 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், வங்கதேசம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச மண்ணில் இங்கிலாந்து அணி 9 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது.

BAN vs ENG 3வது ODI: போட்டி எப்போது தொடங்கும்?
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top