Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அக்கம் பக்கம் நட்பை வளர்க்க வேண்டுமா?” – இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

இன்று பரஸ்பரம் பாராட்டுதல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், நட்புடன் அண்டை வீட்டாருடன் சமூக உறவு கொள்ளுதல் போன்றவற்றில் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

 இதற்கு காரணம் என்று மனிதர்கள் ராக்கெட் வேகத்தில் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நிமிடங்களை கடந்து வாழ முயற்சி செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அண்டை வீட்டாருடன் உறவுகளை மேம்படுத்த சில அருமையான டிப்ஸ்களை எந்த கட்டுரையில் நீங்கள் படித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அண்டை வீட்டு நபர்களோடு நட்புடன் பழக சில டிப்ஸ்

👍உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நட்புடன் அதை நீங்கள் செய்வதின் மூலம் உங்களது உறவு மேம்படும்.

👍அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் செலவிடுவது உங்களுக்கு இடையே இருக்கின்ற நட்பு உறவை மேலும் பலப்படுத்தும். தினமும் இரு வீட்டாரும் இணைந்து வாக்கிங், ஜாக்கிங், கோயிலுக்கு செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

--Advertisement--

நல்ல உணவு வகைகளை நீங்கள் உங்கள் வீட்டில் சமைத்து இருக்கும்போதோ அல்லது பண்டிகை காலங்களிலோ, உங்கள் உணவுகளை, இனிப்பு பண்டங்களை அண்டை வீட்டாரோடு பகிர்ந்து கொண்டு சாப்பிடுவதின் மூலம் உங்கள் நட்புறவு பலமாகும்.

👍வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இருவரும் ஒன்றாக செல்லலாம். சுற்றுலா போன்ற கேளிக்கைகளில் இருவரும் இணைந்து செல்லலாம். இதன் மூலம் உங்களுடைய இருக்கக்கூடிய நட்பு அதிகரிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

👍இரவு நேரங்களில் நீங்கள் சமைக்கின்ற உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதின் மூலம் உங்களுடைய ஆரோக்கியமான உறவு ஏற்படலாம். மேலும் ஹோட்டலுக்கு செல்லும்போது இரண்டு வீட்டாரும் சேர்ந்து சென்று சாப்பிடலாம்.

👍உங்கள் வீட்டு குழந்தைகளை பக்கத்து வீட்டு குழந்தைகளோடு இணைந்து விளையாட விடுவதின் மூலம் இரண்டு குடும்பத்தாரின் நட்புறவும் வளரும்.

இன்றி வளர்ந்து வரும் சமூக ஊடக நட்பை உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பிணைப்பானது விலகி இருக்கும் உங்களை  ஒன்று இணைக்க உதவி செய்யும்.

அதிக நேரங்கள் அண்டை வீட்டாருடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை என்றாலும் பார்க்கும் போது ஹாய் என்றும் வெளியே செல்லும்போது பை என்றும் என் முகத்துடன் நீங்கள் அவர்களிடம் அணுகுவதின் மூலம் உங்கள் நட்புறவு மேலும் பலப்படும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top