Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்ன செய்தாலும் முகத்தில் எண்ணெய் வடிதல்.. நீங்க வில்லையா? – இத செஞ்சா 100% ரிசல்ட்..!!

பொதுவாகவே சருமங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அது எண்ணெய் வடிதல் சருமம், வறண்ட சருமம் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

எண்ணெய் பசை நிறைந்த சருமமாக இருப்பவர்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிதல் அதிகமாக இருக்கும் எப்போதும் இவர்கள் முகத்தை பார்க்கும் போது புத்துணர்வோடு இருக்காது.

 எனவே இந்த எண்ணெய் வடியும் சருமத்தை நீக்கி முகத்தை பொலிவாகவும், லுக்காகவும் வைத்துக்கொள்ள எண்ணற்ற வழிமுறைகளை ஃபாலோ செய்தும் மீண்டும் மீண்டும் என்னை பசை உங்கள் முகத்தில் அதிகம் வெளிப்படுவதால் உங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுகிறதா?

 அப்படி ஏற்பட்டால் இனி நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அதை எளிதில் நீக்கக்கூடிய சில டிப்ஸ்  இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 முகத்தில் எண்ணெய் பசை போக்க டிப்ஸ்

 உங்கள் முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு தக்காளி சாறு சிறிதளவு தேன் சேர்த்து முகம் முழுவதும் தடவி விடுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து நீங்கள் வெதுவெதுப்பான நேரில் எந்த முகத்தை கழுவி விடுங்கள் நீங்கள் இப்படி செய்வதின் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கு மாறி எண்ணெய் வழிவது குறையும்.

--Advertisement--

வேப்பிலை இருந்தால் அந்த வேப்பிலையை வெளியில் லேசாக உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பொடி செய்த இந்த வேப்பிலை பொடியை உங்கள் முகத்தில் லேசாக தண்ணீரோடு கலந்து கொண்டு பூசி விடுங்கள் .இந்த வேப்பிலை பொடிக்கு நுண்கிருமிகளை ஒழிக்க கூடிய ஆற்றல் உள்ளதால் எண்ணெய் வழிவது கணிசமாக குறைவதோடு முகப்பருக்களும் தோன்றாது.

 உங்கள் முகத்திற்கு ஐஸ் கியூபை கொண்டு ஒத்தடம் செய்துவிட்டு அந்தப் பகுதியில் வெள்ளரி காயை அரைத்து அப்படியே பூசி விடுங்கள். அது நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இப்படி செய்வதின் மூலம் உங்களுக்கு சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் விடுதல் நீங்கும்.

 எலுமிச்சம் சாறு சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு நீரை சேர்த்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்து விடுங்கள். பிறகு இது உளறும் வரை காத்திருந்து முகத்தை கழுவி விடுங்கள் இதுபோல தொடர்ந்து நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் ஏற்படக்கூடிய எண்ணெய் பிசுக்கு அடியோடு அழிந்து போகும்.

 ரோஸ் வாட்டர் இருந்தால் அடிக்கடி உங்கள் முகத்தை கழுவுவதற்கு பதிலாக ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்து விடுங்கள். ரோஸ்வாட்டரை கொண்டு துடைத்த பின்பு பவுடரை போடும்போது உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வழிதல் ஏற்படாது.

 முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சைச்சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தேய்ப்பதின் மூலம் எண்ணெய் வடிதலில் இருந்து நிரந்தர தீர்வு பெற முடியும்.

 மேற்கூறிய எந்த குறிப்புக்கள் அனைத்தையும் நீங்கள் ஃபாலோ செய்தால் கட்டாயம் பைசா செலவில்லாமல் உங்கள் முகத்தில் ஏற்படும் எண்ணெய் வழிதலை நீங்களே வீட்டிலிருந்து சரி செய்ய முடியும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top