அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் 2வது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா. முதல் மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகன் என்ற நிலையில், அதில் மகள்கள் நடிக்க வரவில்லை. வெளிநாட்டில் டாக்டர்களாக இருக்கின்றனர். மகன் அருண் விஜய் மட்டுமே நடிகராக இருக்கிறார்.

வனிதா விஜயகுமார்

மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று பேருமே நடிகைகள்தான். ஆனால் 3 பேருமே சில படங்களில் நடித்தும் பெரிய அளவில் கதாநாயகிகளாக வெற்றிப் பெற முடியவில்லை. எனவே, திருமணம் செய்துக்கொண்டு திருமண வாழ்வில் செட்டிலாகி விட்டனர்.

டான்ஸ் மாஸ்டர்

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை மட்டும் சரியாக அமையவில்லை. முதலில் அவர் திருமணம் செய்தது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

காதலித்து அவரை திருமணம் செய்துக்கொண்ட வனிதா விஜயகுமார், சில ஆண்டுகளில் அவரை பிரிந்து விட்டார். பிறகு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஒருவரை திருமணம் செய்தார். அவரும் பிரிந்துவிட்டார், சில மாதங்களில் உடல் நலக்குறைவால் இறந்தும் போனார்.

பிரிந்து வாழ்ந்து வருகிறார்

விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரிடம் சண்டை போட்டதால், பல ஆண்டுகளாவே அப்பா விஜயகுமாருடன் சேராமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார் வனிதா. சமீபத்தில் நடந்த விஜயகுமாரின் பேத்தி தியா திருமணத்தில் கூட வனிதா பங்கேற்கவில்லை.

அவரை யாருமே அழைக்கவில்லை. ஆனால் வனிதாவின் சகோதரிகளான ப்ரீத்தி, ஸ்ரீதேவி ஆகியோர் குடும்பத்துடன் அந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

சினிமாவில் வாய்ப்பிழந்த வனிதா விஜயகுமார் பல ஆண்டுகளாக சினிமா பீல்டில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

சோஷியல் மீடியா

தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் கொண்டாட்டம் போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயகுமார், பேன்சி பொருட்கள், பேஷன் ஆடைகள், மேக்கப் பொருட்கள் போன்ற விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் வனிதா விஜயகுமார், அடிக்கடி தனது பதிவுகளை செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

ஜோவிகா

அவரது மகள் ஜோவிகா, பிக்பாஸ் போட்டியாளராக இருந்த போது, தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, யூடியூப் சேனலில் ரிவ்யூ செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வனிதா விஜயகுமார்.

இதில் நள்ளிரவில் ஒருவர் முகத்தை கிழித்துவிட்டார். அதில் முகத்தில் காயத்துடன் வீங்கிய முகத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதுவும் வைரலானது.

அடுத்த திருமணம் எப்போது?

சமீபத்தில் இன்ஸ்டா ஸ்டோரியில் வனிதா விஜயகுமார், ரசிகர்களை சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர், அடுத்த திருமணம் எப்போது என்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் தந்து இதயம் வடிவத்தையும் அதில் சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!

ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி, அது நிலைக்காமல் போய் விட்டது. இப்போது மீண்டும் 3வது திருமணத்துக்கு வனிதா விஜயகுமார் தயாராகி விட்டதையே இது கூறுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் மகள் ஜோவிகா திருமணத்துக்கு தயாராகி விட்ட நிலையில், இவருக்கு இன்னொரு திருமணம் அவசியமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தனக்கு மாப்பிள்ளை தேடுகிறாரே

அடுத்த புருஷன் யாரு..? என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த பதிலைப் பார்த்து., மகளுக்கு மாப்பிள்ளை தேடாமல், தனக்கு மாப்பிள்ளை தேடுகிறாரே என்று ரசிகர்கள் வனிதா விஜயகுமாரை திட்டி வருகின்றனர்.

   

--Advertisement--