Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து நடித்து அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?


அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைத்த இவர் தாரை தப்பட்டை படத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

வரலட்சுமி சரத்குமார்..

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு விக்ரம் வேதா, சண்டைக்கோழி 2, சர்க்கார், மாரி 2, இரவின் நிழல் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றது.

இவர் எதிர்பார்த்த அளவு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்தில் சென்று அங்கு பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் இவர் அனுமான் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

--Advertisement--


தற்போது மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்து கொள்ள இருப்பதை அடுத்து இவர்களது நிச்சயதார்த்தம் சீரும் சிறப்புமாக பெரியோர்களின் முன்னிலையில் நடந்து முடிந்தது.

பாடாய் படுத்தும் புருஷன்..

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு கோடையை கழிக்க சென்று இருக்கிறார்கள். அங்கு எடுத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வரலட்சுமி வெளியிட்டு வருகிறார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பே ஒரு சின்ன ஹனிமூனுக்கு சென்று இருக்கிறார்களா? என்று நக்கலாக கேட்டதோடு பலரும் அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள்.


இந்த வேளையில் தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு சென்றிருக்கும் நிக்கோலாய் அங்கு உடற்பயிற்சியை செய்யக்கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் அவர் உடற்பயிற்சி செய்வதோடு நின்று விடாமல் வரலட்சுமி கட்டாயம் உடற்பயிற்சி செய்ய தூண்டி இருக்கிறார்.

இதனை அடுத்து வரலட்சுமி கோடையை என்ஜாய் பண்ண வந்த நிலையில் இப்படி உடற்பயிற்சி செய்யச் சொல்லி தனது வருங்கால கணவர் பாடாய்படுத்துகிறார் என்று முகத்திலேயே பாவனைகளால் வெளிப்படுத்தி இருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அசந்து இருக்கிறார்கள்.

புலம்பலில் வரலட்சுமி..

இதனை அடுத்து வரலட்சுமி சரத்குமாரின் புலம்பலின் ரகசியத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் எப்போதுமே பாடியை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவரது கணவர் இவரையும் உடற்பயிற்சி செய்ய அழைத்திருக்கிறார். இதில் எந்த விதமான தவறும் இல்லை என்று சுட்டிக்காட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு அதிக அளவு பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது.


இதையும் படிங்க: நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவையும் புகைப்படங்களையும் மாறி மாறி பார்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு திருமணத்திற்கு முன்பே தாய்லாந்து சென்றிருப்பவர்கள் திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன் எங்கு செல்வார்கள் என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பதால் அதற்குரிய பதிலை கட்டாயம் வரலட்சுமி சரத்குமார் கொடுப்பார் என நம்பலாம்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top