Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சைவ கோலா உருண்டை ..!” – சுவைத்து சாப்பிட எப்படி செய்யுங்க..!

அசைவத்தில் மட்டும் தான் கோலா உருண்டைகளை செய்து சாப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு இப்போது சைவத்திலும் கோலா உருண்டையைப் போல செய்து அசதி உங்கள் பிள்ளைகளை சத்துமிக்க இந்த கோலா உருண்டைகளை சாப்பிட வைக்க முடியும்.

 எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த சைவ கோலா உருண்டையை எப்படி செய்வது என இப்போது படிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.இதனை  படிப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் வீட்டிலும் இதுபோல செய்து அசத்துவதின் மூலம் பிள்ளைகளின் பாராட்டுகளை பெற முடியும்.

சைவ கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

1.வேக வைத்த பச்சை பட்டாணி 50 கிராம்

2.வேகவைத்த உருளைக்கிழங்கு 2

3.பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது ஒன்று

--Advertisement--

4.கடலை மாவு 50 கிராம்

5.கரம் மசாலா ஒரு டீஸ்பூன்

6.பூண்டு இஞ்சி பேஸ்ட் இரண்டு டீஸ்பூன்

7.பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

8.உப்பு தேவையான அளவு

9.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

10.சோம்பு அரை டீஸ்பூன்

11.50 கிராம் சோயா வேக வைத்தது.

செய்முறை

முதலில் வேக வைத்த பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மற்றும் சோயாவை நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் சூடு ஆனதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இது வதக்கிய பின் பூண்டு இஞ்சி பேஸ்ட்யை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

மேலும் அதற்கு தேவையான உப்பு, சோம்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனையடுத்து இந்த கலவையை வேக வைத்து மசித்து வைத்து இருக்கும் பொருளுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது இந்த கலவையுடன் கடலைமாவினை நீர் சேர்த்தாமல் விட்டு கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். பின் இதனை சின்ன கோலா உருண்டை போல உருட்டி கொள்ளவும்.

இனி நீங்கள் அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த உருண்டைகளை எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சைவ கோலா உருண்டை தயார்.

Continue Reading
 

More in

Trending Now

To Top