“சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய வெந்தயக்கீரை கடைசல்” – பருப்பில் போட்டு இப்படி செய்யுங்க..!

இன்று இந்தியாவில் அதிக அளவு இருக்கக்கூடிய நோய்களின் வரிசையில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்த சர்க்கரை நோயாளிகள் உணவில் சில பொருட்களை கட்டாயம் சேர்த்து வருவதன் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்கலாம்.

எப்படி ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைப்பதில் மிகப்பெரிய பணியை செய்கின்ற வெந்தயக் கீரையை கொண்டு எப்படி பருப்பு வெந்தயக்கீரை கடைசல் செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயக் கீரை பருப்பு கடைசல் செய்ய தேவையான பொருட்கள்

1.வெந்தயக் கீரை மூன்று கப்

2.சின்ன வெங்காயம் நறுக்கியது 15

3.தக்காளி இரண்டு

4.துவரம்பருப்பு 150 கி

5.பச்சை மிளகாய் இரண்டு

6.சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்

7.இரண்டு டீஸ்பூன் அளவு தேங்காய் துருவல்

8.தேவையான அளவு உப்பு

 தாளிக்க

9.கடுகு

10.உளுத்தம் பருப்பு

11.தேவையான அளவு தேங்காய் எண்ணெய்

12.ஒரு வர மிளகாய்

செய்முறை

முதலில் வெந்தயக் கீரையை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு இதை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் கொடுக்கப்பட்ட அளவு துவரம் பருப்பை போட்டு அது வேக தேவையான அளவு நீரை ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கி விடவும்.

கால் மணி நேரம் கழித்த பிறகு குக்கரில் இருக்கும் பருப்பை எடுத்து நன்கு மசித்து விட்டு அதனோடு நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரை மற்றும் உப்பை போட்டு மீண்டும் குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.

இதனை அடுத்து ஒரு வானிலையில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை போட்டு வெடிக்க விடவும். இது வெடித்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

 இது பொன் நிறமாக வதங்கக் கூடிய வேளையில் தக்காளியை நறுக்கி போட்டு நன்கு வதக்கவும். இதனை அடுத்து இந்த கலவையை நீங்கள் குக்கரில் இருக்கும் பருப்பு கீரையோடு கொட்டி விட வேண்டும்.

பிறகு இதனை ஒரு சட்டியில் போட்டு மத்தினை கொண்டு லேசாக கடைந்து விடுங்கள். பின்னர் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் சேர்த்து விடுங்கள். இப்போது சூப்பர் சுவையில் வெந்தயக்கீரை கடைசல் தயார்.