கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..

கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..

தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு சிறந்த கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக, சிறந்த பண்பாளராக, துணிச்சல் மிக்கவராக நடந்துக்கொண்டவர் விஜயகாந்த்.

தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது சங்கம் கடனில் இருப்பது தெரிந்து வருத்தப்பட்ட விஜயகாந்த் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி, பல கோடிகள் நிதி திரட்டி நடிகர் சங்க கடனை முழுவதுமாக அடைத்தார். சங்கத்தில் ரூ. 1.70 கோடி இருப்பும் வைத்தார்.

எதிர்கட்சி தலைவரானார்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கிய கேப்டன் விஜயகாந்துக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்தவர். அவரது கட்சி சந்தித்த 2வது தேர்தலிலேயே அவர் எதிர்கட்சி தலைவரானார். ஸ்டாலின் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது ஜெயலலிதா ஆட்சி நடந்தது.

தொடர்ந்து உடல் நலம் பாதிப்பால் வீட்டில் முடங்கிய விஜயகாந்த், அடுத்தடுத்த நோய் பாதிப்புகளால் துவண்டு போனார். அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற்றும், அவர் குணமடையவே இல்லை.

--Advertisement--

கட்சி சின்னாபின்னமாகி

தேமுதிக கட்சி பொறுப்புகளை விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் அவரது தம்பி சுதீஷூம் கவனித்துக்கொண்டனர். அவர்களது கட்டுப்பாட்டில் வந்த பிறகு கட்சி சின்னாபின்னமாகி சிதைந்து விட்டது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் விஜயகாந்த் மறைந்து விட்டார். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தேமுதிக இருக்குமா, என்பதே பலருக்கும் கேள்விக்குறிதான்.

இதையும் படியுங்கள்: அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

மிக கம்பீரமாக விஜயகாந்த்

விஜயகாந்த், கடைசி 7 ஆண்டுகளில் அதாவது 2016க்கு பிறகுதான் இப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் உருகி இப்படி தோற்றம் மாறிப் போனாரே தவிர, சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிக கம்பீரமாக விஜயகாந்த் காட்சியளிப்பார்.

ரோபோ சங்கர் மனைவி

கேப்டன் பிரபாகரான வந்தாலும், சின்னக்கவுண்டராக வந்தாலும் அவரது கெட்டப் மாறினாலும் அவரது கெத்து மாறாது. அப்படிப்பட்ட விஜயகாந்துடன், நடிகர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, வீரம் விளைந்த மண் என்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..

ஸ்லிம் ஆக இருக்கிறாரே…

அந்த புகைப்படத்தில், அழகாக சிரித்தபடி விஜயகாந்த் நின்றிருக்க, அவர் அருகே நடன கலைஞராக, அந்த படத்தில் பாடல் காட்சியில் நடனமாடிய பிரியங்காவும் நின்றிருக்கிறார். இப்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவை பார்க்கும் பலரும், ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த போட்டோவில் பிரியங்கா ஸ்லிம் ஆக இருக்கிறாரே என ஆச்சரியப்படுகின்றனர். ஏனெனில் அவர் இப்போது உடல் பருமனாக காணப்படுகிறார்.