கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகர். துவக்கத்தில் ஹீரோவாக நடித்தவர், பிறகு வில்லனாக பல படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் குறிப்பாக அழகாக ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடித்தார்.

விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகன்தான் அருண்விஜய்.

அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் பல படங்களில், அதுவும் வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அப்பா விஜயகுமாரை போலவே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நல்ல கலைஞராக இருக்கிறார்.

பாண்டவர் பூமி, குற்றம் 23, சினம், தடம், யானை செக்கச் சிவந்த வானம், கண்ணால் பேசவா, இயற்கை, மலை மலை, கங்கா கௌரி, மாஞ்சா வேலு போன்ற பல படங்களில் நடித்தவர்.

ஆர்த்தி

அருண் விஜய், ஆர்த்தியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. மகன், மகள் உள்ளனர். ஆர்த்தியை பொருத்தவரை எல்லா விதங்களிலும் அருண் விஜயை சரியான முறையில் பராமரித்து வருபவர்தான் அவர்தான்.

இதையும் படியுங்கள்: கோடிகளில் சொத்து.. இளம் வயசுலேயே பாட்டி.. சரத்குமாரின் தங்கை.. விஜயகுமாரின் முதல் மகள் பற்றிய ரகசியம்..

கணவருக்கு மட்டும் பிடித்த மனைவியாக ஆர்த்தி இல்லாமல் விஜயகுமார், முத்துக்கண்ணு தம்பதிக்கு மிகவும் பிடித்த செல்ல மருமகளாகவும் அவர் இருக்கிறார்.

மேலும் அருண் விஜயின் அக்கா தங்கை 5 பேருக்கும் பிடித்தவராகவும் ஆர்த்தி இருக்கிறார்.

என் அம்மா ஆர்த்தி

ஆர்த்தி மோகன் என்று பெயர் கொண்ட ஆர்த்தியின் அப்பா பெயர் மோகன், சினிமா தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். ஆர்த்தி சைக்காலஜி படித்தவர்.

பல விஷயங்களில் என்னை காப்பாற்றி, என்னை நல்வழிப்படுத்தி நான் ஒரு சிறந்த தெளிவான மனிதனாக இருப்பதற்கு காரணம் என் அம்மா ஆர்த்தி தான் தன் அம்மாவாக, அவரை புகழ்ந்து பேசியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

போலீசாரிடம் சிக்கி…

திருமணத்துக்கு பிறகு நியூசிலாந்துக்கு ஹனிமூன் கொண்டாட்டத்துக்காக சென்ற போது, காரை ஓவர் ஸ்பீடு ஓட்டியதற்காக அங்குள்ள போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர் ஆர்த்தியும், அருண் விஜயும்.

அவர்களிடம் திக்கித் திணறி ஆங்கிலத்தில் பேசிய அருண் விஜயிடம், இருங்க நான் பேசிக்கிறன், என போலீசாரிடம் கூலாக பேசி பிரச்னையை சால்வ் செய்திருக்கிறார் ஆர்த்தி.

காதல் வாழ்க்கை

இந்த திருமணம் பெற்றோர்களால் செய்து வைக்கப்பட்ட கட்டாய திருமணமாக இருந்தாலும், திருமணத்துக்கு பிறகு காதல் வாழ்க்கையாக அமைந்திருப்பதாக பலமுறை கூறியிருக்கிறார் அருண் விஜய்.

இதையும் படியுங்கள்: கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

இப்படி பல விஷயங்களில் ஒரு மனைவியாக அருண்விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும் மனைவியாக, விஜயகுமார் குடும்பத்துக்கு ஏற்ற மருமகளாக இருந்து வருகிறார் ஆர்த்தி.