Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்

Tamil Cinema News

எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்

தமிழ் திரை உலகில் பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஐஸ்வர்யா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருக்கிறார். மேலும் இவர் இயக்குனர் என்ற நிலையையும் தாண்டி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் நடன கலைஞராகவும் திகழ்கிறார்.

இதையும் படிங்க: கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்..

அதுமட்டுமில்லாமல் சில தனியார் தொலைக்காட்சியின் நடன போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி இருக்கக்கூடிய இவர் விசில் திரைப்படத்தில் சிலம்பரத்துடன் இணைந்து பாடிய பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு தனது கணவரை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அந்த படத்தில் இடம் பெற்ற உன் மேல ஆசை தான் என்ற பாடலையும் பாடி அசத்தினார்.

--Advertisement--

இதை அடுத்து இவர் குடும்பத்தை சீரும் சிறப்புமாக கவனித்து வந்த காரணத்தால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் இருந்து வந்த இவர் தனுஷோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து அவரை பிரிந்து வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் சினிமாவின் மீது மீண்டும் தனது பார்வையை திருப்பி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளி வந்த லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார் இந்த படத்தில் இவரது அப்பா ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

அண்மையில் வெளி வந்த இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவு பெயரை பெற்று தரவில்லை. எனினும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல் கலவை ரீதியான விமர்சனங்களை தந்தது என கூறலாம்.

தனிமை தான் எனக்கு பிடித்தது..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசிய போது இவர் எப்போதும் கூட்டமாக இருக்க விரும்பவில்லை. தனிமையாக இருப்பதற்கு தான் விரும்புவதாக கூறியிருக்கிறார்.


மேலும் தனிமையை விரும்பக் கூடிய இவருக்கு அது போன்ற ஆசையே இல்லை என்பதால் தான் தனுஷை பிரிந்து விட்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் தனிமை பற்றி மிகச் சிறப்பான விளக்கத்தை தந்திருப்பதோடு அந்த ஆசை இல்லை என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

எப்போதுமே தனிமையை விரும்பக்கூடிய இவர் தனிமையாக இருக்கும் போது மிகவும் பாதுகாப்பான உணர்வை பெறுவதாகவும், தனிமை ஒரு மனிதருக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அற்புத கருவி என்பதை பேட்டியில் தெரிவித்தார்.

இது போல இவருக்கு போர் அடிக்கிறது என்ற ஒரு வார்த்தையே தெரியாது. அப்படி போரடிக்கிறது என்றால் என்ன என்று கேட்பாராம். ஒவ்வொரு நாளும் தனிமையை விரும்புவதால் தான் இவர் எந்த அளவு என்று உயர்ந்து இருப்பதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்.

எனவே தனிமையாக இருக்க விரும்பக்கூடிய ஐஸ்வர்யா தனிமையில் தான் அனைத்தையும் பெற முடிகிறது என்ற ரீதியில் பேசியிருப்பதில் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்த தனிமையை கடந்த இரண்டு ஆண்டுகள் மூலம் நன்கு அனுபவித்து இருப்பதாகவும், அதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

இதனால் தனிமையில் இருக்கும் எவராலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். தனிமை ஒரு அற்புதமான பாடம். மனிதன் ஒவ்வொருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் தான் அனைத்தையும் கற்றுக் கொள்வார் என்று தனிமை பற்றி மிகச் சிறப்பான விளக்கத்தை அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top