கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்த மிக அழகான நடிகை மஞ்சுளா. எம்ஜிஆருடன் ரிக்‌ஷாக்காரன் என்ற படத்தில்தான் அறிமுகமானார். தொடர்ந்து அவருடன் நினைத்ததை முடிப்பவன் உள்பட 5 படங்களில் ஜோடியாக நடித்தார்.

விஜயகுமார் திருமணம்

கடந்த 1976ம் ஆண்டில் நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு தந்தை என தெரிந்தும், விஜயகுமார் மீது கொண்ட தீராத காதலால் அவரை மணந்தார். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 பெண்களுக்கும் தாயானார்.

போலீஸ் அதிகாரி அப்பா

ஆந்திராவைச் சேர்ந்த பன்னீர் ராவ், கவுசல்யா தம்பதிக்கு 2வது மகளாக பிறந்த மஞ்சுளாவுக்கு துவக்கத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை. ஏனெனில் போலீஸ் அதிகாரியான அவரது அப்பா கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்.

ஆனால் மஞ்சுளாவின் அம்மா கவுசல்யாவுக்கு தன் மகளை நடிகையாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அதனால் முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொள்ள செய்திருக்கிறார்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: கணவர் அப்படி… மாமியார் இப்படி.. திருமணதிற்கு பிறகு நடிக்க வந்த Pandian Stores 2 Raji..

போலீஸ் அதிகாரியான மஞ்சுளாவின் அப்பா சென்னைக்கு மாற்றலான நிலையில், குடும்பமே சென்னையில் குடியேறியது. நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு வரை மட்டுமே மஞ்சுளா படித்திருக்கிறார்.

பேபி மஞ்சுளா

பிறகு 1969ம் ஆண்டில் சாந்தி நிலையம் என்ற படத்தில், சிறுமியாக நடித்த பேபி மஞ்சுளாவை பார்த்தால், இப்போது அவரது மகள் ஸ்ரீதேவியை போலவே இருக்கிறார்.

விஜயகுமாரை 1976ம் ஆண்டில் திருமணம் செய்த பிறகு 3 குழந்தைகளுக்கு தாயான பின், 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் பல படங்களில் அம்மா, அண்ணி கேரக்டரில் நடித்தார் மஞ்சுளா.

மகள் வனிதா மீது வெறுப்பு

அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் திருமண விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்த மகள் வனிதாவை, என் மகளே இல்லை அவள் என்று பிரஸ்மீட் கொடுத்து வெறுப்பை காட்டிய மஞ்சுளா, ஒரு கட்டத்தில் மகள் வனிதா மீது பாசம் கொண்டவராக நடந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: கணவரின் துரோகம்.. மகளால் மன உளைச்சல்.. விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு யாரு தெரியுமா..?

மதுப்பழக்கத்துக்கு அடிமையான மஞ்சுளா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று, சிறுநீரக பாதிப்பு என பலவிதமான உடல் நல பாதிப்புகளால் உயிரிழந்தார்.

ஆனால் உயிரிழக்கும் சமயத்தில் கணவர் விஜயகுமாரிடம், வனிதாவை வீட்றாதீங்க, அவளை ஏமாத்திடாதீங்க, யாரையும் நம்பாதீங்க சத்தியம் வாங்கிவிட்டு தன் இறுதி மூச்சை விட்டிருக்கிறார் மஞ்சுளா.

கணவர் செய்த துரோகம்

மஞ்சுளா கடைசி சத்தியம் செய்து கேட்டபடி நடந்துக்கொள்ளாமல் கணவர் விஜயகுமார் செய்த துரோகம்.. போலீஸ் அப்பாவின் கண்டிப்பு, கடைசியில் தீராத நோய் என பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியங்கள் இப்போது வெளிவந்திருக்கிறது.