முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல் நடித்த காலகட்டத்தில் அவரும் இளைஞராக பல படங்களில் நடித்திருக்கிறார்.

விஜயகுமார்

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களாக நடிக்க, விஜயகுமார் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடிக்காமல் ஒரு சமயத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்க ஆரம்பித்தார் விஜயகுமார்.

குறிப்பாக கிழக்குச் சீமையிலே படத்தில், ராதிகா அண்ணன் கேரக்டரில் மலையாண்டியாக அசத்தினார். அடுத்து நாட்டாமை படத்தில், சரத்குமார் தந்தையாக நாட்டாமையாக வந்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

குஷி படத்தில் ஜோதிகா அப்பாவாகவும் அசத்தினார். பாரதி கண்ணம்மா, எஜமான் போன்ற படங்களில் மீனா அப்பா விஜயகுமார்தான். அடுத்து நட்புக்காக படத்திலும் விஜயகுமார் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

ஊர் நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர், ஹீரோயின் அப்பா, போலீஸ் அதிகாரி, தாத்தா என்ற எந்த கேரக்டர் என்றாலும் விஜயகுமார் அதில் கம்பீரமாக பொருந்துவார். ஏனெனில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துவரும் அனுபவம் நிறைந்த கலைஞர்.

நந்தினி என்ற டிவி சீரியல் ஒன்றிலும் விஜயகுமார் நடித்திருந்தார். சேரன் பாண்டியன், சுயம்வரம் போன்ற படங்களில் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளாகவே நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:  ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?

முதல் மனைவி முத்துக்கண்ணு

நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள்கள் இருவரும் டாக்டர்களாக உள்ளனர். அடுத்து மகன் அருண் விஜய் நடிகராக இருந்து வருகிறார்.

2வது மனைவி மஞ்சுளா

விஜயகுமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளாவுக்கு 3 பெண்கள். இதில் வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் இருவருமே நடிகைகள்தான். இதில் ப்ரீத்தா விஜயகுமார், இயக்குநர் ஹரியின் மனைவி. ப்ரீத்தா சினிமாவில் நடிக்கவில்லை.

முதல் மனைவியின் மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்த விஜயகுமார், 2வது மனைவி மஞ்சுளா மகள்களை ஏன் படிக்க வைக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் விஜயகுமார் நினைத்திருந்தால் மஞ்சுளாவுக்கு பிறந்த 3 பெண்களையும் டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என படிக்க வைத்திருக்க முடியும். ஆனால் படிக்க வைக்கவில்லை.

இருவரும் டாக்டர்களாக…

அவருடைய முதல் மனைவி முத்துக்கண்ணு மகள்கள் இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். அவர்கள் மட்டும் டாக்டர்களுக்கு படிக்கணும். டாக்டர் வேலை பார்க்கணும். வெளிநாட்டில் வேலை பார்க்கணும். அனிதா மகள் டாக்டர், அவருக்கு கல்யாணம் பண்ணனும்.

இதையும் படியுங்கள்:  என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

வெண்ணெய், சுண்ணாம்பு

விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் முத்துகண்ணு. மற்ற ஒருவர் மஞ்சுளா. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. இது நியாயமா என்று விஜயகுமாரை கேட்கலாம். இந்த கேள்வியை விஜயகுமாரை கேட்பதில் தவறில்லை என்று பேசியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

முதல் மனைவிக்கு வெண்ணெய்.. இரண்டாம் மனைவிக்கு சுண்ணாம்பு.. விஜயகுமார் பாரபட்சம் பார்த்தது சரிதானா என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி, இப்போது வைரலாகி வருகிறது.