Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஓட்கா

“என்னது ஓட்கா.. தலை முடி உதிர்வு, இளநரை போக்குதா? – மெய்யாலுமா?

ஓட்கா அனைவரும் குடித்துத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அது கூந்தலுக்கு இவ்வளவு சிறப்பானது என்பதை நினைத்தால் வியப்பின் எல்லைக்கு நம்மை அழைத்து விடக்கூடிய அளவு உள்ளது என்று கூறலாம்.

இன்று இருக்கும் இளம் தலை முறையினர் பெரும்பாலானோர் இந்த முடி உதிர்தல் பிரச்சனை மற்றும் இளநரை, பொடுகு போன்றவற்றால் அதிக பாதிப்புகளை அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இளம் வயதிலேயே இது ஏற்படுவதால் ஒரு விதமான மன அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள்.

Vodka

அவர்கள் கட்டாயம் ஓட்காவை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லையை நீங்கி, முடி உதிர்வு பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். அது மட்டுமல்லாமல் நீங்கள் நினைக்கும் பட்டு போல கேசத்துக்கு இந்த ஓட்கா உதவி செய்யும்.

இதற்காக நீங்கள் ஓட்காவை ஒரு தேக்கரண்டி எடுத்து உங்கள் தலையில் தேய்த்து குளித்தாலே போதும். தலைமுடியில் இருக்கும் அழுக்குகள் நீங்கி தலைமுடி சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாறும்.

Vodka

மேலும் பொடுகுத் தொல்லையில் இருப்பவர்கள் ஓட்கா உடன் சம அளவு நீரை சேர்த்து அதை உங்கள் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விட்டு குளிர்ந்த நீரால் உங்கள் முடியை கழுவும் போது நீங்களே ஏற்படக்கூடிய மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள்.

--Advertisement--

ஓட்கா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு, ஒரு ஸ்பூன் தேன் இவற்றை நன்றாக கலந்து உங்கள் உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதின் மூலம் உங்கள் தலைமுடிக்கு உகந்த ஊட்டச்சத்து கிடைத்து முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படாது.

Vodka

ஓட்காவில் இருக்கக்கூடிய ஆல்கஹால் உங்கள் முடியின் வேர்கால்களை மேம்படுத்தி உதவி செய்வதால் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கான வாய்ப்புகளை இது தருகிறது.

ஓட்காவோடு, ஆமணக்கு எண்ணெயும் சேர்த்து நீங்கள் பயன்படுத்தும் போது முடி உதிர்தல் பிரச்சனைக்கு நீங்கள் எளிதில் விடை காணலாம்.

Vodka

மேற்கூறிய இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் கட்டாயம் ஓட்காவை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்திப்பாருங்கள் நல்ல மாற்றம் கிடைத்தால் எங்களோடு அதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top