Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கால்மிதியை இப்படி துவைத்தால் நீண்ட நாள் உழைக்கும்..!” – மணமும் வீசும்..!!

 நம் வீடுகளில் ஹால் முதல் அடுக்குலை வரை கால்மிதி இல்லாத இடமில்லை என்று கூறும் அளவுக்கு நம் காலில் உள்ள அழுக்குகளை நீக்க கால்மிதிகள் பயன்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கால்மிதிகளை முதலில் நாம் தரம் வாரியாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதை ஹாலில் பயன்படுத்துவது, சமையல்கட்டில் பயன்படுத்துவது, குளியல் அறை மற்றும் கழிவறைகளில் பயன்படுத்துவது என்று பிரித்து கொள்ளலாம்.

இப்போது இந்த கால்மிதிகளை எப்படி துவைத்தால் நீண்ட நாள் உழைக்கும் என்பதோடு நல்ல மனமும் வீட்டுக்குள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 தரவாரியாக பிரிக்கப்பட்ட கால்மிதிகளை தனித்தனியாக தண்ணீரில் முதலில் போட்டு விடுங்கள். இதனை அடுத்து இந்த கால்மிதியில் இருக்கக்கூடிய அழுக்கு போக நீங்க என்ன டிடர்ஜென்ட் அல்லது லிக்விட் பயன்படுத்துகிறீர்களோ அதை ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

 பிறகு இதனை தனித்தனியாக துவைத்து எடுத்து அலசும் போது சிறிதளவு பெர்ஃப்யூம் ஊற்றி அலசினால் வாசம் தூக்கலாக இருக்கும். பொதுவாக எந்த கால் மிதிகளை உங்கள் வாஷிங்மெஷினில் போட்டு துவைப்பதை தவிர்த்து விடுங்கள்.

மேலும் ஊற வைத்த இந்த கால்மிதிகளை உங்கள் கைகளால் துவைத்தாலே போதுமானது.இதன் மூலம் எளிதில் அழுக்கு நீங்குவதோடு நீண்ட நாள் உழைக்கக்கூடிய தன்மையும் கொண்டிருக்கும். இதனை குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது கால்மிதிகளை துவைத்து போடுவதின் மூலம் அதிக அழுக்குகள் கால்மிதிகளில் படியாமல் இருப்பதற்கு நான் காரணமாக இருக்கலாம்.

--Advertisement--

 மேலும் உங்களிடம் பெர்பியும் இல்லை என்றால் கம்போர்ட் போன்ற வாசனை மிக திரவங்களை போட்டு அலசலாம் முடிந்தால் லிக்விட் போட்ட பிறகு வேப்பிலை சாறு சிறிதளவு எடுத்து அதையும் கலந்து ஊற வைத்து விடுவதின் மூலம் நல்ல கிருமி நாசினியாகவும் கால்மிதிகளில் இருக்கக்கூடிய தொற்றுக்களை அகற்ற கூடிய வேலையை இந்த வேப்பிலை சாறு செய்யும். எனவே மறந்து விடாமல் இதுபோல செய்து பலனைப் பெறுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top