பிக்பாஸ் சீசன் 3-யில் இந்த போட்டியாளர் வந்திருப்பது பெரும் அவமானம் - பொழந்து கட்டிய தாடி பாலாஜி


நடிகர் தாடி பாலாஜி சினிமா நடிகர் என்றாலும் விஜய் தொலைகாட்சியில் தான் பல காலமாக பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒருவர் இருக்கிறார் என்றால் அது இவர் தான்.

தனது மனைவி நித்யா-வுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் இனிமேல்ஒற்றுமையாக இருப்பேன். எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஆனால் வெளியே வந்த பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான்.


இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர். வனிதா பிக்பாஸ் வீட்டின் ஓனர் போல நடந்து கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த பெரிய அவமானம் இவர். 

பெற்று வளர்த்த அப்பாவையே அவன், இவன் என்று கூறுகிறார். அவருக்கும் அவரது அப்பாவுக்கு ஆயிரம் இருக்கட்டும். ஆனால், வனிதா என்று கூறினால் யாருக்காவது தெரியுமா. வனிதா விஜயகுமார் என்று கூறினால் தான் தெரியும். தன்னுடைய அடையாளத்தை அவரே திட்டுகிறார். என்று விளாசியுள்ளார் தாடி பாலாஜி.