இன்ஸ்டாவில் வெளியான மோசமான வீடியோ..! பிக்பாஸ் ரவீனா கொடுத்த பதிலை பாருங்க..!

சில நேரங்களில், யாரிடம் எதை கேட்பது என்பதை சிலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. சாவியை கொண்டு போய் திருடனிடமே கொடுப்பது போல, திட்டமிட்டு தப்பு செய்பவர்களிடமே, தப்பு நடக்காமல் தடுப்பதற்கு என்ன வழி என்று ஆலோசனை கேட்பது போல் சில நேரங்களில், சிலர் அபத்தமாக கேள்வி கேட்டு விடுகின்றனர்.

ரவீனா தாஹா

ரவீனா தாஹா, சின்னத்திரை வழியாக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 பார்த்தவர்கள் யாரும் இவரை மறந்து விட முடியாது. ஏனெனில் சக போட்டியாளர் மணி என்பவருடன் ரவீனா தாஹா பிக் பாஸ் வீட்டுக்குள் குடும்பமே நடத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தேனிலவு தம்பதி போல

பிக்பாஸ் வீட்டுக்குள் எந்நேரமும் படுக்கையில், சோபாவில் ஒன்றாக படுத்துக் கொண்டும், ஒன்றாக உட்கார்ந்து கொண்டும் மடியில் படுத்துக் கொண்டும், இடுப்பில், தோளில் சாய்ந்து கொண்டும் அவர்கள் இருவரும் தேனிலவு வந்த இளம் தம்பதியர் போல்தான் பிக் பாஸ் வீட்டுக்கு நாட்களை கடத்தினார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால், கேம் ஷோ என்றார்களே, இது ஏதோ காதல் படம் பார்ப்பது போல இருக்கிறதே, என்று பார்வையாளர்களுக்கு திகைப்பை, முகச்சுளிப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

--Advertisement--

மௌனராகம் சீரியல் நடிகை

ரவீனா தாஹா டிவியில் நடன நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து மௌனராகம் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மணியுடன் நடத்திய காதல் லீலைகளில் மற்றவர்களால் கவனிக்கப்பட்டார் என்பது மட்டுமே உண்மை.

அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் ரவீனா கலந்து கொண்டார்.
விஜய் மகனுடன் நடிக்க ஆசை

சமீபத்தில் ஒரு நேர்காணலில், யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டபோது, விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவருடன் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் விஜய் மகனுடன் நடிக்க ஆசைப்படும் சீரியல் நடிகை ரவீனா தாஹா என்று பரபரப்பாக சமூக வலைதளங்களில் இவர் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது

ரீல்ஸ் குறித்து அட்வைஸ்

சமீபத்தில் தன்னுடைய படத்தின் ரிலீஸ் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரவீனாவிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற பெயரில் மோசமான வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இது பற்றி உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரவீனா ரீல்சாக இருந்தாலும் சரி அது எந்த ஒரு சமூக வலைதளமாக இருந்தாலும் சரி, அதனை நல்ல விஷயங்களுக்கு ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு விஷயமாகவும், அதே சமயம் தகவல்களை கொடுக்கும் விஷயமாகவும் நல்ல முறையில் மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பதில் கொடுத்திருக்கிறார். நடிகை ரவீனா

மோசமான வீடியோ

அவ்வப்போது இணைய பக்கங்களில் குட்டையான இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு, மோசமான வீடியோ வெளியிடக்கூடிய ஒருவர் ரவீனா. இவரிடமே இந்த கேள்வியும் மறைமுகமாக கேட்ட பத்திரிகையாளர்களுக்கு நடிகை ரவீனா இப்படி பதில் கொடுத்து இருக்கிறார்.

ஊருக்குதான் உபதேசமா?

இன்ஸ்டாவில் வெளியான மோசமான வீடியோகளை வெளியிடுபவரே பிக்பாஸ் ரவீனா போன்ற ஒரு சிலர்தான். ஆனால் அவரே பிறருக்கு புத்திமதி சொல்வது போல் கொடுத்த பதிலை பார்த்த ரசிகர்கள், நல்லாருக்குங்க உங்க அட்வைஸ், ஆனா ஊருக்கு உபதேசம் பண்ற நீங்க அதை பாலோ அப் பண்ணுங்க முதல்ல, என்று கடுப்பாக கமெண்டுகளை செய்து வருகின்றனர்.