வெளியானது "பிகில்" பாடல்கள் ரிலீஸ் தேதி..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!

 
இயக்குனர் அட்லிகுமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "பிகில்" படத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய சில விஷயங்களை சொல்ல இருக்கிறார். படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையே நடந்து வருகிறது.
 
2019 தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பட ஃபஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலின் விவரம் வெளியானது. விஜய், ரகுமான் இசையில் பாடுகிறார் என்றதும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.
 
இப்போது ரசிகர்களுக்காக வந்துள்ள அப்டேட் என்னவென்றால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். நிகழ்ச்சிக்கான இடம், தேதி போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கின்றனர்.