புதிய சர்சையை கிளப்பிய ஆடை படத்தின் புதிய போஸ்டர்..! - இதோ புகைப்படம்


நடிகர் வைபவ் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. 

இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணாவின் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கயவர்களிடம் பெண் ஒருவர் ஆடையின்றி ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். 

ஆடையின்றி இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும் என்று துவண்டு போன பெண். ஒரு கட்டத்தில் நான் தப்பித்து தான் ஆகவேண்டும் என்று ஆடை மட்டும் தான் இல்லை தைரியம் இருக்கிறது என்று முழு பலத்தையும் பயன்படுத்தி ஆடையின்றியே அங்கிருக்கும் கயவர்களை அடித்து துவம்சம் செய்து எஸ்கேப் ஆகிறார்.


பிறகு, அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சற்று முன்பு படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.பொதுவாக ஒரு ஹிட் படத்தை கொடுத்தஇடக்குனர் இன்னொரு படம்இயக்கினால் From the Director of the Movie என்று தான் போஸ்டர் வெளியிடுவார்கள். ஆனால், இந்த படத்தில் Not From the Director of MEYADHA MAAN என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் 6-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதோ அந்த போஸ்டர், 

Share it with your Friends