தர்ஷனின் கெட்ட பழக்கம்..! - பிக்பாஸ் வாய்பை எப்படி பெற்றார் தெரியுமா..?


பிக்பாஸ் சீசன் 3-யில் உள்ள 17 போட்டியாளர்களில் ஒருவராக களம்இறங்கியுள்ளார் இலங்கையைசேர்ந்த மாடல் தர்ஷன். இவருக்கு இந்த வாய்பை வாங்கி கொடுத்தவர் யார் என்று கேட்டால் அவருடைய காதலியும், நடிகையுமான  ஷனம்ஷெட்டி தான். 

நடிகை மீரா மிதுன் வென்ற அழகி பட்டம் பறிக்கப்பட்டு நடிகை ஷனம் ஷெட்டி-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குறுகிய வட்டமான மாடல் துறையில் இருந்து கிட்ட தட்ட ஐந்து போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது பிக்பாஸ் குழு. 


அபிராமி, ஷாக்ஷி, மீரா மிதுன், தர்ஷன் மற்றும் சீரியல் நடிகர் கவின் ஆகியோருக்கு பிக்பாஸிற்கு வரும் முன்பே பல வழிகளில் அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவார்கள். 

நடிகர் கவினின் நெருங்கிய தோழி மீரா மிதுனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதனை, கவின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அபிராமி , ஷாக்ஷி , மீரா மிதுன் ஆகியோர் ஒரே மாடலிங் குழுவில் பல போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். 

சமீபத்தில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீரா மிதுனின் அழகி பட்டம் பறிக்கப்பட்டு ஷனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்டது. ஷனம் ஷெட்டியின் காதலர் தான் தர்ஷன். 

அதனால் தான் பிக்பாஸ் வாய்பை ஷனம் ஷெட்டி தர்ஷனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். மேலும்,   தர்ஷனை போட்டோ ஷூட் செய்த பிரபல புகைப்படகலைஞர் ஜோவி என்பவர் கூறுகையில். 


பணப்பிரச்னை காரணமாக தர்ஷன் பல நாட்கள் சாப்பாடு கூட இல்லாமல் இருந்திருக்கிறான். ரொம்ப நல்ல பையன். யார் எதை சொன்னாலும் அப்படியே நம்புவான். தன்னிடம் பழகுபவர்கள் மீது அளவு கடந்த பாசம் காட்டுவான். அது தான் அவனுடைய கெட்ட பழக்கம் என கூறியுள்ளார் ஜோவி. 

புகைப்பட கலைஞர் ஜோவி நடிகை சன்னிலியோன், ராக்கி சாவந் என பல பிரபலங்களை போட்டோ ஷூட் செய்தவர் ஆவார்.