என்றோ ஒரு நாள் எதேர்ச்சியாக கேட்ட விஷயம் - ஆனால்... - அஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்


போனிகபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவர். பாலிவுட்டில் பல ஹிட் படங்களை தயாரித்து கொடி கட்டி பறந்தவர். ஆனால், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்விப்படங்களாக அமைய மிகப்பெரிய பண நஷ்டத்தை சந்தித்தார். அதன் பிறகு, தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீ தேவியின் சொத்துக்கள் அவருக்கு கை கொடுத்தன. தற்போது, நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார். 

தமிழ் நாட்டில் அஜித்தின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பளர்கள் காத்து கிடக்கும் நிலையில், போனிகபுருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று அவரிடமே கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், அஜித் எங்கள் குடும்ப நண்பர். நாங்கள் சென்னைக்கு வந்தாலும் அஜித் வீட்டுக்கு சென்று விட்டுதான் வருவோம். அதே போல அஜித் மும்பை வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வரவமால் திரும்ப மாட்டார். 

ஸ்ரீ தேவியுன் இங்க்லிஸ் விங்கிலிஷ் படத்தின் போது எங்கள் நட்பு இன்னும் பலம் பெற்றது. ஒரு நாள் மும்பையில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, எதேர்ச்சையாக, எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி கொடுங்க என்று கேட்டோம். அப்போது ஸ்ரீ தேவியும் எங்களுடன் இருந்தார். Sure sir கண்டிப்பா பண்ணலாம் என்று கூறினார். 

அதன் பிறகு, துரதிருஷ்டவசமாக ஸ்ரீ தேவி இழப்பை நாங்கள் சந்திக்க வேண்டியிருந்தது. உடைந்து போனேன். என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஜித் ஆறுதல் கூறினார். சில நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைத்து எப்போது படம் பண்ணாலாம் சார் என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.