என்ன சிம்ரன் இதெல்லாம்..? - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! - வீடியோ உள்ளே


மேயாத மான்' படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா. இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார். 


ஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு இப்போது நடந்தே விட்டது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள "சூப்பர் டூப்பர்" படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் இந்துஜா. சமீபத்தில், சூப்பர் டூப்பர் படத்தின் இடம்பெற்றிருக்கும் "ஜில் ஜில் ராணி" என்ற வீடியோ பாடல் வெளியானது. 


இதில், ஐட்டம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார் அம்மணி. இந்நிலையில், இந்த படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகள் சில இணையத்தில் வெளியாகின. 

மேயாத மான் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதேபோல் தற்போது பிகில் படத்திலும் இவருக்கு மிக முக்கியமான பாத்திரம் தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தில் இன்னும் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகள் போன்ற நிறைய அடல்ட் விஷயங்கள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it with your Friends