தன்னுடைய படத்திற்கு தானே டிக்கெட் விற்ற விஷால் பட நடிகை - முண்டடித்த ரசிகர் கூட்டம்..!


நடிகை ராஷி கண்ணா தமிழில் அடங்க மறு , அயோக்யா, சங்கத்தமிழன் , ஷைத்தான் கி பச்சா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 

இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கில் 'பிரதி ரோஜு பன்டாகே' என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் நேற்று வெளியானது இந்த படத்திற்கான டிக்கெட்டை ராஷி கண்ணாவே விற்றார். பட விளம்பரத்தின் ஒரு புதிய முயற்சியாக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது படக்குழு.

ஆந்திராவில் உள்ள பிரபல திரையரங்கமான கோகுல் திரையரங்கில் நடிகை ராஷி கண்ணாவே டிக்கெட் கவுண்டரில் உட்காந்து படத்திற்காக டிக்கெட்டுகளை விற்றார். ராஷி கண்ணா டிக்கெட் விற்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் முண்டியடித்து கொண்டு வந்து ராஷி கண்ணாவிடம் டிக்கெட்டை வாங்கி சென்றார்கள் .

தன்னுடைய படத்திற்கு தானே டிக்கெட் விற்ற விஷால் பட நடிகை - முண்டடித்த ரசிகர் கூட்டம்..! தன்னுடைய படத்திற்கு தானே டிக்கெட் விற்ற விஷால் பட நடிகை - முண்டடித்த ரசிகர் கூட்டம்..! Reviewed by Tamizhakam on December 19, 2019 Rating: 5
Powered by Blogger.