"உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணாலும் கூப்பிடு..!" உருகிய நடிகை - கடுப்பில் நெட்டிசன்கள்!


மீரா மிதுன் என்றாலே இன்னிக்கு என்ன சர்ச்சை என்று தான் ரசிகர்கள் நினைகிறார்கள். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கி கொண்டார் மீரா மிதுன்.

இவரை பற்றி வெளியே பல புகார்கள் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் வெள்ளந்தியாகவே இருந்து வந்தார். ஆனால், இயக்குனர் சேரன் மீது இவர் கூறிய இடுப்பு பிடி புகார் இவரை அந்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே தூக்கிப்போட்டது.

இந்நிலையில்,நேற்று முன் தினம் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்-ன் தந்தை காலமானார். இது பலரையும் சோகத்தில் ஆழத்தியிருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக " உனக்காக நான் இருக்கேன். என்னை எப்போது வேணா கூப்பிடு" என கூறியிருந்தார்.


ஆனால், அதில் முகென் ராவ்-ன் ஐடியை மென்சன் செய்யாமல் வேறு ஒரு போலியான கணக்கின் ஐடியை மென்சன் செய்து விட்டார். இதனை பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு வச்சு செய்து வருகிறார்கள். 

முன்னதாக, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பாக முகெனுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் மியூசிக் சேர்த்து வெளியிட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்க வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறினார் மீரா மிதுன். அவர் பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


"உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணாலும் கூப்பிடு..!" உருகிய நடிகை - கடுப்பில் நெட்டிசன்கள்! "உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணாலும் கூப்பிடு..!" உருகிய நடிகை - கடுப்பில் நெட்டிசன்கள்! Reviewed by Tamizhakam on January 29, 2020 Rating: 5
Powered by Blogger.