5 வயசுல அப்பாவின் முதல் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அருண்விஜய்..!


தமிழில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த "முறை மாப்பிள்ளை" என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். 

இவர் அறிமுகமாகும் போதே நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பிம்பத்துடன் தான் என்ட்றியானார். ஆனால், அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. 

ஆனாலும், சினிமா குடும்பம் என்பதால் வருடத்திற்கு ஒரு படம் என ஏதாவதொரு ஒரு படத்தில் தலை காட்டி வந்தார். இவர் நடிப்பில், கடந்த வருடம் வெளிவந்த "தடம்" திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இவரது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தை விஜயகுமார் வாங்கிய முதல் காருடன் நின்று கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் இதனை குறித்த ரசிகர்கள் கமெண்டில் அருண் விஜய் அவர்களின் சிறு வயதை புகைப்படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...
Advertisement

Share it with your Friends