இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை அனுஷ்கா..! - ரசிகர்கள் ஆச்சரியம்.!


அனுஷ்காவின் குண்டான உடலைப் பார்த்து கடுப்பான ஆந்திர ரசிகர்கள், எங்களுக்கு ஒல்லியான அனுஷ்கா தான் வேண்டும், அப்படி இருந்தால் தான் பட வாய்ப்புகள் குவியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆலோசனைகளை வாரி வழங்கி வருகின்றனர். 

அனுஷ்கா என்ற பெயரில் சினிமாவில் ஜொலித்த ஸ்வீட்டீ ஷெட்டி (Sweety Shetty) பல திரைப்படங்களில் நடித்து தனது திறமையையும், கவர்ச்சியான உடல் வாகையும் வைத்து மாபெரும் வெற்றி பெற்றார். 

தனது வெற்றியை தக்க வைத்து கொள்ள பல முயற்சிகள் செய்து பாகுபலி எனும் ஒரு பிரமாண்ட படத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஸ்லிம்மாக இருந்த போது குடும்பப்பாங்கினி, கவர்ச்சி தேவதை என வெரைட்டியான பல ரோல்களில் நடித்தார். 

இதனால், பல கதாபாத்திரங்கள் வந்து குவிந்தன. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.

சமீபத்தில் மாதவனுடன் நிசப்தம் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று அனுஷ்கா கூறி இருந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த அனுஷ்கா ஷெட்டி மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளாராம். உடல் எடை கூடுவதும், இறங்குவதாகவும் இருக்கும் அனுஷ்கா முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளராம். 

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளார் அனுஷ்கா என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறுவதற்கு நல்ல ரீ-என்டிரியாக இந்த படம் இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் அனுஷ்கா. ஆனால், இந்த படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. 

நடிகை அனுஷ்காவின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை அனுஷ்கா..! - ரசிகர்கள் ஆச்சரியம்.! இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை அனுஷ்கா..! - ரசிகர்கள் ஆச்சரியம்.! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.