விஜய்யுடன் இந்த வேடம் கிடைத்தால் கூட நடிப்பேன் - அழகு பொம்மை சாரா வெங்கடேஷ் ஒப்பன் டாக்..!


பெங்களூருவை சேர்ந்த புது வரவு நடிகை சாரா வெங்கடேஷ். நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் நடிக்கும் இவன் தான் உத்தமன் படத்தில் ஹீரோயினாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படம் குறித்து அவர் கூறுகையில், இவன் தான் உத்தமன் திரைப்படம் திகில் நிறைந்த த்ரில்லிங்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறியுள்ளார். 

மேலும், IT துறையில் பணியாற்றி வந்த எனக்கு சினிமா ஆசை இருந்ததாகவும். சில குறும்படங்களில் நடித்துள்ளேன் எனவும் இவன் தான் உத்தமன் படத்தின் ஆடிஷன் நடப்பது கேள்விப்பட்டு வந்த போது படத்தின் நாயகியாக தேர்வானேன் எனவும் கூறியுள்ளார் அம்மணி.

Actress Sara Venkatesh

தொடர்ந்து பேசிய அவர், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் எனவும் கவர்ச்சி பொம்மையாக வலம் வருவதில் எனக்கு உடன் பாடில்லை என தெரிவித்துள்ளார். 

Actress Sara Venkatesh

மேலும், தளபதி விஜய் படத்தில் சிறிய வேடம் கிடைத்தால் கூட நடித்துவிடுவேன். விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என கூறியுள்ளார்.

Actress Sara Venkatesh