அந்த ஒரே படத்தில் கார் வாங்கினேன், வீடு வாங்கினேன், கல்யாணமும் பண்ணினேன் - பாண்டியராஜன் உணர்ச்சி வசம்..!


தனது 23-வது வயதிலேயே இயக்குனராகி, முதல் படத்தை வெற்றிப்படமாக தந்தவர் பாண்டியராஜன். நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். 

கன்னிராசி, ஆண்பாவம், நெத்தியடி, கதாநாயகன், தாய்க்குலமே தாய்க்குலமே என இவர் எடுத்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். 

ஒரு சிறிய கதை, அதற்கு அழுத்தமான திரைக்கதை, வயிறு புண்ணாகும் அளவிற்கு சிரிக்க வைக்கும் காமெடி என இவர் இயக்கிய படங்கள் எல்லாமே காலத்துக்கும் நின்று பேசும் பாக்ஸ் ஆபிஸ் கமர்சியல் படங்கள்.

இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை சைதாபேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கலைத்துறையின் மேல் உள்ள ஈடுபாட்டால் தன் இளம் வயதிலேயே, திரைத்துறையில் சேர்ந்து தனது திரையுலக வாழ்வினைத் துவங்கினார்.

திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்குவிசுக்கு நடையும் தான் நடிகர் பாண்டியராஜனின் அடையாளங்கள். சினிமாவைவிட்டு ஒதுங்கிவிடாமல் சமகால நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வருகிறார் இவர்.

சமீபத்தில், "சீகர்" தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டு பேசியது விருதுகள் வழங்கினார். இதில் பேசியவர் தன்னை சாதாரண நடிகன் காமெடியன் என நினைக்கிறார்கள்.


அதை தாண்டி நான் பல சீரியஸான டாக்குமெண்ட்ரிகளையும் எடுத்துள்ளேன். அவை சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன. நான் 10-ம் வகுப்பு வரை பிடித்து இயக்குனரான பின் அஞ்சல் வழியில் எம்.ஏ. எம்.ஃபில் படித்தேன்.

இப்போது நான் 3 பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். சினிமா நல்ல தொழில். அதனை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள். என் உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என ஆசைப்படக்கூடாது.

ஆனால் நான் நடித்தேன். "ஆண் பாவம்" என்ற படத்தை எடுத்தேன். அந்தஒரே படத்தின் மூலம் வீடு வாங்கினேன், கார் வாங்கினேன். அதே வருமானத்தில், திருமணமும் செய்து கொண்டே. உழைத்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என கூறினார்.


--Advertisement--
Share it with your Friends