தெலுங்கில் ஹிட் அடித்த "அலா வைகுண்டபுரம்லோ" ரீமேக் உரிமையை வாங்க போட்டி போடும் முன்னணி தமிழ் நடிகர்கள்..!


ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் "அலா வைகுண்டபுரம்லோ" இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லு அர்ஜுனுக்கு நல்ல ப்ரேக் கொடுத்த படமாக அமைந்தது. பொதுவாக, தமிழில் ஹிட் அடித்த படத்தை தெலுங்கிலும், தெலுங்கில் ஹிட் அடித்த படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய போட்ட போட்டி நடக்கும்.

அந்த வகையில், தற்போது இந்த படமும் தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் பிரபல முன்னணி நடிகர்கள் இதன் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கிசுகிசுக்க படுகிறது. 

நடிகர் சிம்புவை வைத்து வாலு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர், இதில் சிம்புவை நடிக்க வைக்க யோசித்து வருகிறாராம். இது ஒருபக்கம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்க போட்டி போட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

அலா வைகுண்டபுரம்லோ படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற போவது யார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தெலுங்கில் ஹிட் அடித்த "அலா வைகுண்டபுரம்லோ" ரீமேக் உரிமையை வாங்க போட்டி போடும் முன்னணி தமிழ் நடிகர்கள்..! தெலுங்கில் ஹிட் அடித்த "அலா வைகுண்டபுரம்லோ" ரீமேக் உரிமையை வாங்க போட்டி போடும் முன்னணி தமிழ் நடிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.