"இதனால தான் என்னை பற்றி அப்படி பேசுறாங்க.." - நித்யா மேனன் சுளீர்..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர்களில் நித்யா மேனன் குறிப்பிடத் தகுந்தவர். தனது 10 வயதில் நடிக்க வந்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார்.
மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு
படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ‘180’ என்ற படத்தின்
மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதனாலேயே திறமையான நடிகை என்ற நல்ல பெயரைப் பெற்றுள்ளார். ஆனால் இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது.
இந்நிலையில் தன் மீதான இந்த விமர்சனம் தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். அதில், எனக்கு இயக்குனர் கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்கின்றனர். அதற்குக் காரணம் எல்லா விஷயங்களிலும் எனது விதிமுறை என்பது தனித்துவமானதாகத்தான் இருக்கும்.
எனக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற பேச்சு இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் கதை கேட்கிற நேரத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படி கேட்பதால் தான் எனக்கு கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள்.
நல்ல கதை, தெளிவான அம்சங்கள் இருந்தால் தவிர நான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னைக் கவர்கிற மாதிரியான கதைகள் இல்லாத படங்களை ஒப்புக்கொள்வது இல்லை. அவற்றில் நடிக்கவும் விரும்ப மாட்டேன். அதனால் தான் அப்படி பேசுகிறார்கள் என நித்யா மேனன் கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகள் தங்களிடம் சொல்லும் போது ஒரு கதையும் படத்தில் ஒப்பந்தமான பிறகு வேறு ஒருகதையையும் எடுக்கிறார்கள் என்று புகார்களை கூறுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் கதையை முழுக்க முழுக்க கேட்ட பிறகே நடிக்க ஒப்புக்கொள்கிறாராம் நித்யா மேனன்.
"இதனால தான் என்னை பற்றி அப்படி பேசுறாங்க.." - நித்யா மேனன் சுளீர்..!
Reviewed by Tamizhakam
on
December 27, 2020
Rating:
