Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையோடு செயல்படுவது மிகவும் முக்கியமானது. அதற்கான கடுமையான உழைப்பில் ஈடுபட வேண்டும் இதுதான் நீங்கள் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்க எளிதில் பிடிக்க முடியும்.

இந்த காரியம் நிறைவேறுவதற்கு எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டு வருவீர்கள். அப்படி நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது உங்களுக்கு உங்களுடைய ராசிக்கு உரிய கடவுளை வழிபடுவதும் அதற்கு ஏற்ப நீங்கள் செயல்படுவதும் உங்கள் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும்.

மேலும் உங்கள் ஜென்ம ராசியில் நிலையை அனுசரித்து அனுதினமும் நீங்கள் செயல்களை செய்வதின் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் நீங்கள் பிரகாசம் அடையலாம். கலை மற்றும் இசையில் ஈடுபடுவதன் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள்  இன்று எனவே இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்துங்கள். அதிக முயற்சிகளை எடுக்கும் போது நல்ல பலன்களை பெறுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நல்ல வளர்ச்சி காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு பணிகளை மிகச் சிறப்பாக முடிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது.

--Advertisement--

நிதியை பொறுத்தவரை பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாக இருப்பதால் வங்கிகளில் உங்கள் கை இருப்பு உயரும். ஆரோக்கியமும் இன்று சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ரிஷபம்

ராசி அன்பர்களே இன்று முயற்சிகளுக்கான பலன் கிடைக்க கூடிய நாள் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். சுய வளர்ச்சிக்காக நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றம் ஏற்படும். அதற்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் திறமை பளிச்  என்று வெளிப்படும். உங்கள் பணிகளுக்கு பாராட்டு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதால் என்ற தொழில் ஸ்தானம் அமோகமாக இருக்கும்.

  நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பண புழக்கம் அதிகரித்து காணப்படும். எனவே உங்கள் படத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். இது நல்ல பலனை கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த சுணக்கமும் இல்லை ஆரோக்கியம் என்று மிகச் சிறப்பாக காணப்படுவதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று சாதகமான நாள் இல்லை. மன உளைச்சல் காரணமாக அமைதி இல்லை என்ற நிலை உங்களிடம் அதிகரித்திருக்கும்.மேலும் அதில் எப்போதும் குறை உள்ளது போலவே நீங்கள் உணர்வீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள் பணி பாதியளவு தான் முடியும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். எனவே தொழில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை என்று பண வரவு குறைந்து காணப்படுகிறது. எவ்வளவுதான் பணம் வந்தாலும் அது உங்களுக்கு பற்றாது.பணத்தை இழக்க வாய்ப்புகள் உள்ளதால் கவனத்தை செலுத்தவும்.

 தொண்டை சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்வதை நீங்கள் தவிர்த்து விடுங்கள் இதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

கடகம்

 எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எண்ணத்தை கொண்டிருக்கும் கடக ராசி நேயர்களே இன்று காரியங்களை விரைவாக முடிக்க நீங்கள் முயற்சி செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். சகப் பணியாளர்களிடம் தடைகள் ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் உள்ளதால் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை தேவையற்ற செலவுகள் வந்து உங்கள் கையிருப்புகள் கரையும். சேமிப்பதற்கு குறைய வாய்ப்பு இருப்பதால் திட்டமிட்டு செலவிடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

சிம்மம்

 சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நிலை அமைய வேண்டும் என்றால் உங்கள் அணுகுமுறையில் கவனம் தேவை. பாடல்கள் கேட்பது திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு இன்று நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழில் ஸ்தானதைப் பொறுத்தவரை தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும். எனவே பணியில் கவனத்தில் செலுத்துங்கள்.

 நிதி நிலைமைக்கு பொருத்தவரை உங்களது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் குறைவாக இருப்பதால் புழக்கத்தில் கட்டுப்பாடு நிலவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன உளைச்சல் காரணமாக கை வலி, தோள்களில் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் அதனை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அபாரமான நாளாக உள்ளது. சிறந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் நெருங்கியவர்களின் இதயத்தை தொடக்கூடிய வகையில் உங்கள் செயல்கள் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பது இருப்பதால் இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி செய்யும் முறையை மேம்படுத்துவதோடு சக பணியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். உங்கள் பணியை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டு செய்வார்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை சுதந்திரமாக நிதி நிலைமை இருப்பதால் வங்கி கையிருப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த கவலையும் இல்லை இன்றைய தினம் மிகுந்த ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல நாளாகவும் ஆக்கபூர்வமான நாளாகவும் இந்த நாளை மாற்றி அமைப்பீர்கள். உறுதியான திட்டமிடுதல் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். இந்த நாள் உங்களுக்கு பயனுள்ள நாளாக அமையும்.

 தொழில் ஸ்தனத்தை பொருத்தவரை வெற்றிகள் கிட்டும்.மேலும் உங்கள் அபாரமான பணியின் காரணமாக வெற்றிகள் சேரும். பணியில் கூடுதலாக லாபங்களும் பலன்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

 நிதி நிலை பொறுத்த வரை இன்று சிறப்பான நாள் என்பதால் உங்கள் சேமிப்புகள் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நல்ல முறையில் உதவிகளை நீங்கள் செய்வீர்கள்.ஆரோக்கியம் உறுதியும் இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றலோடு இன்று விளங்குவீர்கள்.

விருச்சிகம்

சவால் மிகுந்த நாளாக இன்று விருச்சிக ராசி நேயர்களுக்கு இருப்பதால் அமைதியாகவும் எதையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் நன்மைகள் வந்து சேரும். இன்றைய சூழ்நிலை உணர்ந்து அவற்றை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று இறுக்கமான நிலை இருப்பதால் திட்டமிட்டு தொழில்களை செய்வது அவசியம். சிறந்த முறையில் கவனத்தை செலுத்தி பணியை செய்வதன் மூலம் மட்டுமே பணிகளை விரைவாக முடிக்க முடியும்.

நிதி நிலைமையை பொறுத்த வரை பண வரவு திருப்திகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இதனால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதுகு வலி ஏற்படலாம். ஞானமூலம் நீங்கள் அமைதி பெற முடியும். எனவே கடவுளை நம்புங்கள் கைவிடப்பட மாட்டீர்கள்.

தனுசு

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுடைய நாள் அல்ல. உங்கள் மனதில் குழப்பம் ஏற்படும். ஆர்வம் குறையும். வளர்ச்சிகள் அனைத்துமே பாதிக்கப்படும். எனவே எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பலமுறை யோசிப்பது அவசியம் ஆகும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியமாகும். உங்களை நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்ய தயார் படுத்திக் கொள்ளுங்கள் உன் மூலம் உங்களுக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும்.

நிதி நிலமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவு தான் காணப்படும். பணத்தை சேர்க்க  வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு தடைகள் வரும். பரபரப்பான தருணங்களை சந்திக்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் சரியான நேரத்தில் உணவு அருந்துவதை அவசியமாக பின்பற்றுங்கள். ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்துங்கள்.

மகரம்

 மகர ராசி அன்பர்களே என்று அமைதியான நாள் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க கூடிய அளவு வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் விருப்பங்கள் யாவும் இன்று என்னால் நிறைவேற்றப்படும். புதிய முயற்சிகள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். திறமைகளும் திட்டமிட்டு எதிலும் செயலாற்றக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மற்றவர் பாராட்டை பெறுவீர்கள்.

 நிதியை பொறுத்தவரை சம்பாதிக்க கூடிய யோகம் என்று அதிக அளவு இருப்பதால் சேமிப்புகள்  உயரும். சிறப்பான நாளாக இந்த நாள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த ஒரு சுணக்கமும் என்று காணப்படவில்லை என்பதால் நீங்கள் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை.

கும்பம்

 கும்ப ராசி நேயர்களே இன்று விருந்தினர் வருகையால் நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பதன் மூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை வெற்றியும் மகிழ்ச்சியும் நிலவுவதால் நீங்கள் கட்டாயம் தொழிலில் நல்ல முறையில் முன்னேறுவீர்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் கட்டாயம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பல தேவைகள் பூர்த்தி அடையும் நாள். உங்களுக்கு பெரிய அளவு பணம் கிடைக்க இருப்பதால் இன்று அதிர்ஷ்டமான நாள் என்று கூறலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று எந்த விதமான கவலையும் இல்லை ஆரோக்கியமும் மேம்பட்டு இருக்கும் எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்.

மீனம்

இன்று மீனராசி நேயர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் பலன்கள் சிறப்பாக கிடைக்காது. அசௌரியமாக நீங்கள் உணர்வீர்கள். தியானம் மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழில் பிரச்சனைகளில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படும். பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருப்பதால் கவனத்தை செலுத்தி பணியில் முடிக்க வேண்டும். நிதியை பொறுத்தவரை பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் உங்களது மன நிலையில் குழப்பம் ஏற்படும்.

 கண்ணும் கருத்துமாக இருந்து செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியத்தில் குறை ஏற்படும். தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top