க்ளைமாக்ஸ்-ஐ மாற்றிய தல அஜித்..! - சூப்பர் ஹிட் ஆன படம்..! - எந்த படம் தெரியுமா..?

அஜித் தன் திரைப்பயணத்தில் பல வெற்றி தோல்விகளை சந்தித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் அடுத்து அனைவரும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தான் வெயிட்டிங்.

நேற்று அஜித்தின் 48வது பிறந்தநாள் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட, வில்லன், வரலாறு என இரண்டு மெகா ஹிட் படங்களை அஜித்திற்கு கொடுத்த கே.எஸ்.ரவிகுமார் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘வரலாறு படத்தில் முதலில் வில்லன் அஜித் தான் இறப்பது போல் இருந்தது, பிறகு அஜித் தான், அது எப்படி சாரி, அவர் எந்த தவறும் செய்யவில்லையே, செய்தது எல்லாம் அப்பா தானே, எனவே அவர் தான் இறக்கவேண்டும் என்று கூறினார்.

அதை தொடர்ந்து எங்களுக்கும் அந்த லாஜிக் பிடித்து, அப்படியே எடுத்தோம், படம் மெகா ஹிட் ஆனது’ என்று கூறியுள்ளார்.