தமிழில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் அமோகமான
வரவேற்பை பெற்றது. முதல் சீசன் அளவிற்கு இரண்டாவது சீசன் அமையவில்லை என்பது
நிஜம்.
இப்போது கடந்த சில நாட்களாக மூன்றாவது சீசன் பற்றிய
செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. போட்டியாளர்கள் இவர்கள் தான் என
பெயர்கள் நிறைய அடிபடுகிறது, ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை.
பிக்பாஸ்
2வது சீசனில் கலந்துகொண்ட வைஷ்ணவி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது
அவர் சிம்புவின் வல்லவன் படத்தில் சின்ன காட்சியில் வந்துள்ளார். அந்த
காட்சியை எப்போது எடுத்தார்கள் என்பது கூட தெரியாதாம்.
11வது வகுப்பு
படிக்கும் போது வேறொரு பள்ளிக்கு போட்டியில் கலந்துகொள்ள சென்ற போது
எடுத்துவிட்டார்களாம். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவா வைஷ்ணவி என
அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.




