மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பாயும்புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து பெரிய படங்கள் அமையாததால் கடந்த வருடம் டெலிவிஷனில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்தன. மகத் ஜோடியாக புதிய படத்தில்
நடிக்க ஒப்பந்தமானார். அலேகா என்ற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்து
வருகிறார். இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
போர்வைக்குள் காதல் ஜோடிகளின் கால்கள் மட்டும் தெரிவதுபோல் படத்தை
வெளியிட்டு இருந்தனர். இதில் ஐஸ்வர்யா தத்தா ஆபாசமாக நடிப்பதாக சர்ச்சைகள்
எழுந்தன. ஆனால் படக்குழுவினர் இதனை மறுத்து முழு காதல் படமாக அலேகா
தயாராகிறது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவை ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.




