காதலில் தொபுக்குட்டீர் என குதித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.! - இவர் தான் காதலானா..???


சீமராஜா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய விருது பெற்ற 29 வயது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காதல் வலையில் விழுந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்த ஜூனியர் நடிகர், ஐஸ்வர்யா ராஜேஷ் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்  என்பது, கோலிவுட்டில் வெளிவந்த  தகவல் . 

எனவே, ஐஸ்வர்யா ராஜேஷின் திருமண அறிவிப்பு, வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post