நீயா 2 படத்தை ரிலீஸ் செய்ய தடை..! - விஜய் தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் உத்தரவு..!


அண்மையில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நீயா 2. இப்படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் பங்குதாரர் ஏ.ஸ்ரீதர். 

தற்போது இவர் மீது விஜய் கோத்தாத்திரி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனுதாக்கல் செய்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த மெல்லிசை படத்தை தயாரிப்பதற்காக என்னிடன் ஸ்ரீதர் ரூ 1.10 கோடியை கடனாக பெற்றார். 

அதில் ரூ 75 லட்சத்தை கொடுத்துவிட்டார். ஆனால் மீத தொகை ரூ 35 லட்சத்தை தரவில்லை. இந்நிலையில் அவர் எனக்கு தரவேண்டிய இந்த தொகையை கொடுக்காமல் நீயா 2 படத்தில் சாட்டிலைட் உரிமையை தொலைகாட்சி விற்கும் முடிவில் இறங்கியுள்ளார். அதனை தடை செய்யவேண்டும் என கூறியுள்ளார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்தவதில் தற்போது நிலையை தான் தொடர வேண்டும் என நீதிபதி கூறியதால் படத்தை டிவி சானலுக்கு விற்க தடை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post