தல 60 எந்த மாதிரியான படம்..! - வெளியான அசத்தல் அப்டேட்


தற்போது அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். 

 இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லை யாம் இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் மிகவும் பிரமாண்டமாக தயாராக உள்ளதாம். 

இன்னும் சொல்லப்போனால் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் மிகவும் ஸ்டைலிஷாக இப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தின் அஜித்தின் ரேசிங் திறமையை முழுமையாக காணலாம் என்றும் கூறுகிறார்கள் . மேலும் இந்தப் படத்துக்காக அஜித் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம் இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--