அப்போ காசுக்காக என்ன வேணும்னா பண்ணுவீங்க அப்டிதானே..? - சமந்தா மாமனாரை வருத்தெடுக்கும் ரசிகர்கள்


ரட்சகன் படத்தின் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவர்தான் நடிகை சமந்தாவின் மாமனார். 

இவர் நடிப்பில் உருவாகி வரும் மன்மதடு இரண்டாம் பாகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. காரணம், தன்னுடைய மகள் வயது உள்ள நடிகைக்கு லிப்-லாக் கிஸ் அடித்திருந்தார் 60 வயதாகும் நாகர்ஜுனா. 

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகின்றது. இது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும் நாகர்ஜுனா இதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. 

கிட்ட தட்ட இவர் தான் பிக்பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்குவார் என உறுதியாகியுள்ளது. இப்போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. காசுக்காக என்ன வேணும்னா பேசுவீங்க..? என்ன வேணா பண்ணுவீங்க.? என அக்கட தேசத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அப்படி என்னதான் பண்ணாரு நாகர்ஜுனா என்று கேட்கிறீர்களா..?