Posts

Showing posts with the label BiggBoss Seson 3 Telugu

அப்போ காசுக்காக என்ன வேணும்னா பண்ணுவீங்க அப்டிதானே..? - சமந்தா மாமனாரை வருத்தெடுக்கும் ரசிகர்கள்

Image
ரட்சகன் படத்தின் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவர்தான் நடிகை சமந்தாவின் மாமனார்.  இவர் நடிப்பில் உருவாகி வரும் மன்மதடு இரண்டாம் பாகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. காரணம், தன்னுடைய மகள் வயது உள்ள நடிகைக்கு லிப்-லாக் கிஸ் அடித்திருந்தார் 60 வயதாகும் நாகர்ஜுனா.  இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகின்றது. இது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும் நாகர்ஜுனா இதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.  கிட்ட தட்ட இவர் தான் பிக்பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்குவார் என உறுதியாகியுள்ளது. இப்போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. காசுக்காக என்ன வேணும்னா பேசுவீங்க..? என்ன வேணா பண்ணுவீங்க.? என அக்கட தேசத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அப்படி என்னதான் பண்ணாரு நாகர்ஜுனா என்று கேட்கிறீர்களா..?  ஆம், பிக்பாஸ் நிகழ்சியை குறித்து ஒரு மேடையில் இவர் பேசியது தான் இத்தனை பிரச்னைக்கும் காரணம். சினிமா விழா ஒன்றில் ப...

பிக்பாஸ் சீசன் 3 நிறுத்தம்..? -ரசிகர்கள் ஷாக்

Image
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. தமிழில் இந்நிகழ்ச்சி ஜூன் 23 ல் தொடங்குகிறது.  அண்மையில் இதற்கான புரமோக்களும் வெளியாகின. கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் வருவதால் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது ரகசியமாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஜூனியர் NTR தொகுத்து வழங்கிய முதல் சீசன் போல நானி தொகுத்து வழங்கிய சீசன் 2 இல்லை. மறுபக்கம் சீசன் 3 க்கு போட்டியாளர்களாக அழைக்கப்பட்ட பிரபலங்கள் யாரும் சரியாக மறுபதில் கூறவில்லையாம். இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிறுத்தம் என தகவல் பரவியுள்ளது. இது தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. ஆனால் நிகழ்ச்சி குழு தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என கூறியுள்ளது. நாகார்ஜூனா, வெங்கடேஷ் அல்லது அனுஷ்கா தான் தொகுப்பாளர் என பெயர் அடிபட்டு வந்த நிலையில் நாகார்ஜூனா தான் என மெஜாரிட்டியாக தகவல் சுற்றி வருகிறது. ...