Posts

Showing posts with the label nagarjuna

யப்பா.. இதாண்டா படம்.. முதல் 30 நிமிஷம்.. தெறிக்கவிட்ட ரஜினி.. லோகேஷ் வைத்த TWIST.. #Coolie_Review

Image
பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் விமர்சனத்தை உற்சாகமாக பகிர்ந்துள்ளார். முதல் நாள் முதல் காட்சியை நகரி திரையரங்கில் கண்டு ரசித்த அவர், இப்படம் 100 நாள் ஓடக்கூடிய மாபெரும் வெற்றி படமாக அமையும் என உறுதியாக தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்தின் முதல் காட்சி திரையரங்குகளில் திருவிழாக் கூட்டத்தை ஈர்த்து, ரசிகர்களின் கொண்டாட்டத்தால் அதிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படத்தின் கதை: மர்மமும் திருப்பமும் நிறைந்த பயணம் ‘கூலி’ படத்தின் கதை சென்னை ராயப்பேட்டையில் ஒரு மேன்ஷனை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த மேன்ஷனின் உரிமையாளரான தேவா (ரஜினிகாந்த்), தனது நண்பரான சத்யராஜுடன் இணைந்து கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார். சத்யராஜ் ஒரு கட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன், தேவாவை குற்றம்சாட்டி வெளியேறுமாறு கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, தனது நண்பனின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க தேவா ஒரு தீவிரமான பயணத்தை மேற்கொள்கிறார். கதை மேலும் விசாகப்பட்டினத்தின் துறை...

‘வெறித்தனம்..’ இது தேவையில்லாத ஆணி.. “கூலி” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

Image
சென்னையில் மேன்ஷன் நடத்தி வரும் தேவா (ரஜினிகாந்த்), கடுமையான விதிகளுடன் தன் வாழ்க்கையை நடத்துகிறார். குடிக்கக் கூடாது, கண்ட சேனலைப் பார்க்கக் கூடாது, பர்சனல் போன் பயன்படுத்தக் கூடாது, ரூம் நம்பர் 114-ஐ அணுகவே கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள். இந்நிலையில், அவரது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) விசாகப்பட்டினத்தில் மர்மமான முறையில் இறக்கிறார். ராஜசேகரின் மகள்கள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்) மற்றும் அவரது தங்கைகளுக்கு ஆதரவாக நிற்கும் தேவா, இந்த மரணம் ஒரு கொலை என்பதை அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சைமன் (நாகர்ஜூனா) இதில் ஏதோ தொடர்புடையவர் எனத் தெரிகிறது. கடத்தல் தாண்டி மர்மமான செயல்களில் ஈடுபடும் சைமனை கண்காணிக்க காவல்துறையும் உளவாளிகளை அனுப்புகிறது. ராஜசேகரை கொன்றது யார்? துறைமுகத்தில் உண்மையில் நடப்பது என்ன? இதுதான் மீதிக்கதை. படத்தின் பலங்கள்: ரஜினிகாந்த் இப்படத்தின் முதுகெலும்பு. 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் மாஸ் மன்னனாக விளங்கும் அவரது ஆளுமை இன்னும் மங்கவில்லை. நண்பனின் இழப்புக்கு வருந்துவது, எதிரிகளை பந்தாடுவது, கலகலப்பான...

கூலி படத்தில் நாகர்ஜுனா காட்சிகளை நீக்கிடுங்க.. பகீர் கிளப்பும் ரசிகர்கள்.. இது தான் காரணம்!

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஆசன், சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்நிலையில், நாகர்ஜுனாவின் கதாபாத்திரமான ‘சைமன்’ தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. ரஜினி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், “நாகர்ஜுனாவின் காட்சிகளில் கதைக்கு தேவையற்றவற்றை நீக்க வேண்டும்.  இல்லையெனில், படத்தின் வெற்றிக்கு நாகர்ஜுனா மார்தட்டுவார், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது” என லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை, கூலி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.  மறுபுறம், நாகர்ஜுனாவின் ரசிகர்கள், கூலி படத்தின் சைமன் கதாபாத்திர போஸ்டர் அதிக லைக்குகளைப் பெற்றதாகக் கூறி, “நாகர்ஜுனாவின் மாஸ் இதுவே நிரூபிக்கிறது” என இணையத்தில் ரஜினி ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் போஸ்டர், ஆகஸ்ட் 29, 2024 அன்று நாகர்ஜுனாவின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது, மேலும் அவரது ஸ்டைலான த...

அப்போ காசுக்காக என்ன வேணும்னா பண்ணுவீங்க அப்டிதானே..? - சமந்தா மாமனாரை வருத்தெடுக்கும் ரசிகர்கள்

Image
ரட்சகன் படத்தின் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவர்தான் நடிகை சமந்தாவின் மாமனார்.  இவர் நடிப்பில் உருவாகி வரும் மன்மதடு இரண்டாம் பாகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. காரணம், தன்னுடைய மகள் வயது உள்ள நடிகைக்கு லிப்-லாக் கிஸ் அடித்திருந்தார் 60 வயதாகும் நாகர்ஜுனா.  இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகின்றது. இது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும் நாகர்ஜுனா இதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.  கிட்ட தட்ட இவர் தான் பிக்பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்குவார் என உறுதியாகியுள்ளது. இப்போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. காசுக்காக என்ன வேணும்னா பேசுவீங்க..? என்ன வேணா பண்ணுவீங்க.? என அக்கட தேசத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அப்படி என்னதான் பண்ணாரு நாகர்ஜுனா என்று கேட்கிறீர்களா..?  ஆம், பிக்பாஸ் நிகழ்சியை குறித்து ஒரு மேடையில் இவர் பேசியது தான் இத்தனை பிரச்னைக்கும் காரணம். சினிமா விழா ஒன்றில் ப...

மகள் வயது நடிகைக்கு லிப்-லாக் கொடுத்த நாகர்ஜுனா - சர்ச்சையில் சிக்கிய வீடியோ இதோ

Image
தமிழில் வெளியான சுட்டிக்குழந்தை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர்நாகர்ஜுனா ரட்சகன் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் படங்கள் ஏதும் நடிக்காமல் முழுமையாக தெலுங்கில் கவனத்தை செலுத்தினார்.  நடிகர்சமந்தாவின் மாமனாரான இவர் தற்போது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பு நாயகன் ஆகியுள்ளார். காரணம், அவர் நடிப்பில் உருவாகி வரும் மன்மதடு இரண்டாம் பாகத்தின் டீசர் தான். இந்த டீசரில் தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகைக்குலிப்-லாக் அடிக்கிறார் நடிகர் நாகர்ஜுனா. ஆனால், அந்த நடிகை யாரென்றே சொல்லாமல் டீசரை முடித்துவிட்டனர். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், அக்‌ஷரா கௌடா என இரண்டு பேர் கதாநாயகியாக இருக்கும் நிலையில் லிப் லாக் காட்சியில் இருந்தது அக்‌ஷரா தான் எனகூறுகிறார்கள்.