நடிகர் பார்த்திபன் 80-களில் ஹீரோவாக நடித்து வந்தார். 1990-ம் ஆண்டு நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார் பார்த்திபன். தொடர்ந்து, இல்லறம் நல்லறமாக சென்றுகொண்டிருந்தது.
ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் ஏன் உங்களது மனைவி சீதா-வை பிரிந்த பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற கேள்விக்கு பார்த்திபன் பதில் அழித்துள்ளார்.
என்னுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அடுத்து என்னுடைய மகன் உள்ளார்.அவருடைய திருமணம் முடிந்ததும் என்னுடைய திருமணம் என கலகலப்பாக கூறியுள்ளார்.
ஒருவேளை, திருமணம் செய்துகொண்டால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, திருமணம் எல்லாம் வேண்டாம் ஒரு நல்ல பார்ட்னராக இருக்க கூடிய ஒரு பெண்ணாக இருந்தால் போதும் என கூறியுள்ளார்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.