காதல் தோல்வியால் ராஜஸ்தானை சேர்ந்த இளம் காதல் ஜோடி எடுத்த முடிவு நாட்டையே உழுக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பர்மர் என்ற நகரைச் சேர்ந்தவர் இருபத்தியொரு வயதான அஞ்சு
சுதார் என்ற பெண். இவர், அதே பகுதியை சேர்ந்த சங்கர் சௌத்ரி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அஞ்சு சுதார்-ன் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
திருமணமாகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மீண்டும் இருவரும் சந்தித்து கொண்டு "அதேப்" என்ற பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டிற்கு சென்று, நாட்டுத் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டு தற்கொலை
செய்துகொண்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்
இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இருவரின் உடல்கள் கிடைத்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்துள்ளன. அதனால்
அவர்கள் குடிபோதையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது அந்த பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.



