வம்சம் திரைப்படத்தில் சின்ன கேரக்டர் ஒன்றில் நடித்தவர் நடிகை நந்தினி. அதற்குப்பின், அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை. ஆனாலும், அவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் வரத் துவங்கின.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடிக்கத் துவங்கினார். அந்தக் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு, சின்னத்திரை வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, ப்ரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத் தம்பி, அரண்மணைக்கிளி, டார்லிங் டார்லிங் என நிறைய சின்னத் திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்து, நந்தினி நடித்தார்.
இதற்கிடையில், ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். அவர் திடுமென தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்தே, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், நந்தினி, டி.வி., சீரியல், ரியாலிட்டி ஷோ என்று தொடர்ந்து பரபரப்பாகவே இருந்தார்.
இந்நிலையில், அவர் இன்னொரு டி.வி., சீரியல் நடிகரை காதலிப்பதாக அவரே கூறியிருக்கிறார். அவரையே, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கும் நந்தினி, அந்த நடிகர் யார் என்பதை மட்டும் கூறாமல் விட்டு விட்டார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சன் தொலைக்காட்சியில் வெளிபரப்பாகி வரும் நாயகி தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஸ்வரன் படத்தை டேக் செய்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் நந்தினி. கூடவே, I love you papa என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து, நந்தினி பெயர் குறிப்பிடாமல் பேட்டியில் கூறிய காதல் நடிகர் யோகேஸ்வரன் தான் என, தகவல் பரவி இருக்கிறது. விரைவில் இவரை திருமணம் செய்ய உள்ளார் நந்தினி.

Tags
Maina Nadhini