வேண்டாம் விடு.. கதறிய மாமியார்.. விடாமல் மருமகன் செய்த அசிங்கம்.. விசாரணையில் வெளியான வினோதம்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த 41 வயது அஜ்மத் உசேன் என்பவர், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாகக் கூறி, மாமியார் ஆசியம்மாள் (48) என்பவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜ்மத் உசேன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தஸ்லீமா தனது இரு குழந்தைகளுடன் அமராவதியில் உள்ள தாய் ஆசியம்மாளின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். மேலும், அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் முயற்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அஜ்மத் உசேன் தனது மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் நோக்கில் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா வீட்டில் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டும் இருந்தார்.

மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கேட்டபோது, ஆசியம்மாள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெற்ற தாயே மகளை தன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் இருந்தது விநோதமாக இருக்கிறது என வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளை சரமாரியாக தாக்க தொடங்கினார்.

வேண்டாம் என மறுத்து கத்தி கதறியுள்ளார் மாமியார். ஆனால், ஆத்திரம் அடங்காத அஜ்மத் உசேன் பலமுறை குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து அஜ்மத் உசேன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். 

தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது.

இறுதியில், தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அஜ்மத் உசேன் அளித்த வாக்குமூலத்தில், “நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பினேன். ஆனால் எனது மாமியார் அதற்குத் தடையாக இருந்தார். 

அவர் இருக்கும் வரை எனது குடும்பம் ஒன்று சேராது என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட அஜ்மத் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Dindigul district near Palani, a 41-year-old man named Ajmath Hussain visited his mother-in-law's house to take his wife and children back home. When she refused, an argument started. He then attacked her with a knife. Police later arrested him.