வைகைப்புயல் வடிவேலு 1991-ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமானார். நடிகர் ராஜ்கிரனை எதேர்ச்சையாக ஒரு ட்ரெயினில் சந்தித்த வடிவேலு பிறகு அவருடன் பேசி நட்பாகி ராஜ்கிரண் மூலமாகத்தான் சினிமாவில் நுழைந்தார்.
அதுவும் ராஜ்கிரண் பாடத்திலேயே அறிமுகமானார். அதன் பிறகு அவருடைய வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து உச்சத்தை தொட்டது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக விளங்கினார்.
ஆனால், பிரபல அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார் வடிவேலு. எந்த ஒரு நடிகரும் தன் மீது கட்சி வாடையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் வாடையோ வீசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், வடிவேலு அதனை மறந்தார்.
இன்று வரை அவருடைய இடத்தை யாரும் நிரப்பவில்லை என்பது ஒரு புறம். ஆனால், மீண்டும் பட வாய்ப்புகள் கிடைப்ப்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது.
இவருக்கும், நடிகர் சிங்கமுத்துவிற்கும் உள்ள வாய்க்கா தகராறு எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சிங்கமுத்து "வடிவேலுவிடம் பணிபுரிந்த ஒரு மேனேஜர் தூக்குப்போட்டு கொண்டார்.
அது மட்டுமின்றி துளசி என்ற ஒரு பெண் பால் டாயில் குடித்தார். இதெல்லாம் யாரால், அதற்கு என்ன காரணம் என்று நான் சொல்லட்டுமா?" என்று அதிர வைத்துள்ளார். இது ரசிகர்களை கடும் அதிர்சிகுள்ளாக்கியுள்ளது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.