நீச்சல் உடையில் குளத்தில் மிதக்கும் மஞ்சிமா மோகன் - வைரலாகும் புகைப்படம்


நடிகை மஞ்சிமா மோகன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்வில் சிறந்தது நீச்சல் குளங்கள் என்று பதிவிட்டுள்ளார்.நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், மலையாளம், தெலுங்கு  ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

கேரளாவின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக 2000-ம் ஆண்டு அறிமுகமானார். திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோரின் மகள் தான் நடிகை மஞ்சிமா மோகன். 

தமிழில் 2016-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைபடத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் மஞ்சிமா.மதுரமனோம்பர்கட்டு என்ற மலையாளப் படத்தில் மாயா  என்ற காதாபாத்திரத்தில் நடித்ததற்காக கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருதை பெற்றுள்ளார் மஞ்சிமா.

சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கு நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.