உடலுறவில் 90% ஆண்கள் செய்யும் தவறு! பெண்கள் இதை விரும்புவதில்லை! எச்சரிக்கும் மருத்துவர்!

இன்றைய இளம் தலைமுறையினர், குறிப்பாக ஆண்கள், இணையத்தில் எளிதில் கிடைக்கும் ஆபாசப் படங்களைப் பார்த்து தங்கள் உடலமைப்பு குறித்து தவறான புரிதல்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

இதனால் பலர் தங்கள் ஆணுறுப்பு நீளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆன்லைனில் விற்கப்படும் பல்வேறு மருந்துகளை நாடுகின்றனர். இந்த நிலை முற்றிலும் தவறானது என்றும், இது இளைஞர்களுக்கு உடல் உபாதையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் பிரபல பாலியல் மருத்துவர் வர்ஷினி அசோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் வர்ஷினி அசோகன் கூறுகையில், “ஆபாசப் படங்களில் வரும் நடிகர்களின் உடலமைப்பை தங்களுடையதாக ஒப்பிட்டு, தங்கள் ஆணுறுப்பு நீளமாக இல்லையே என்று கவலைப்படும் ஆண்கள் அதிகம் உள்ளனர்.

இந்த எண்ணம் முற்றிலும் தவறானது. ஒரு ஆணின் இயற்கையான உறுப்பு அளவே அவருக்கு போதுமானது. அதை விட நீளமாக இருக்க வேண்டும் என்றுநினைப்பது தேவையற்ற கவலையை மட்டுமே ஏற்படுத்தும்” என்றார்.

பெண்ணின் உறுப்பு ஆழம் குறித்த உண்மை

பொதுவாக ஒரு பெண்ணின் உறுப்பின் ஆழம் 3 முதல் 4 இன்ச் வரை மட்டுமே இருக்கும் என்று மருத்துவர் தெரிவித்தார். இதைவிட அதிக நீளமான உறுப்பு இருந்தால், அது பெண்ணுக்கு சங்கடத்தையும் கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனால் முறையான தாம்பத்திய உறவை அவரால் அளிக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.

“இரண்டு இன்ச் அளவு இருந்தாலே ஒரு ஆண் தனது துணையை திருப்திப்படுத்த முடியும். ஆணுறுப்பு நீளமாக இருப்பதால் பெண்கள் அதிகம் விரும்புவது கிடையாது. மாறாக, நீளமான உறுப்புகளைப் பார்க்கும் போது பல பெண்கள் பயப்படுவார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

90% இளைஞர்கள் தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர்

ஆபாசப் படங்களின் தொடர்ச்சியான தாக்கத்தால் இன்று சுமார் 90 சதவீத இளம் ஆண்கள் இந்த விஷயத்தில் தவறான கண்ணோட்டத்தில் இருப்பதாக மருத்துவர் வர்ஷினி அசோகன் தெரிவித்தார். 

இதனால் அவர்கள் தங்கள் இயற்கையான அளவை ஏற்றுக்கொள்ளாமல், தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆன்லைன் மருந்துகள் பலனற்றவை – உபாதை தரும்

ஆணுறுப்பை நீளமாக்கும் என்று ஆன்லைனில் கொட்டிக்கிடக்கும் மருந்துகள் மற்றும் விளம்பரங்கள் இளைஞர்களை எளிதில் கவர்கின்றன. ஆனால் இவை எந்த விதத்திலும் நிரந்தர பலனைத் தராது. மாறாக, உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர் எச்சரித்தார்.

தனது மருத்துவ அனுபவத்தில், ஆலோசனைக்கு வரும் தம்பதியர்களில் சில ஆண்கள் “இதற்கு ஏதேனும் மருந்து இருக்கிறதா?” என்று கேட்பதாகவும், அவர்களுக்கு அவர் அளிக்கும் பதில் எப்போதும் ஒன்றுதான் என்றும் கூறினார்.

“என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை நான் பொதுவெளியில் பதிவு செய்கிறேன். ஒரு ஆணுக்கு இயற்கையாக எந்த அளவு உறுப்பு இருக்கிறதோ, அதுதான் அவருடைய இயற்கை. அதை ஏற்றுக்கொண்டு, தவறான புரிதல்களை கைவிட வேண்டும்” என்று மருத்துவர் வர்ஷினி அசோகன் தெளிவுபடுத்தினார்.

இந்த எச்சரிக்கை, இளம் ஆண்களிடையே உள்ள தேவையற்ற கவலையைப் போக்கி, ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Dr. Varshini Ashokan addresses a common misconception among men influenced by online content. Many believe greater length of their private organ is essential for partner contentment. She clarifies that natural size is sufficient and two inches can be adequate. Excessive length may cause discomfort. She warns against ineffective online products that can harm health and urges acceptance of one's natural form.