பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானர்கள் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. இருவரும் சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தைகொடுத்தது.
போட்டியில் இருக்கும் வரை சரியோ, தவறோ ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியே வந்த பிறகும் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி வருகிறார்கள்.
அப்படி செல்லும் இடங்களில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது, தங்களுடைய ஒரு வருட நட்பை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியதுடன். கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.



